முதனி (Primate) (/ˈpraɪmeɪt/ (கேட்க) PRY-mayt) (இலத்தீன்: "prime, முதன்மை") என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்கள் ஆகும்.[2][3] சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மிதவெப்பமண்டலக் காடுகளிலுள்ள மரங்களில் தொங்கி தாவி வாழ்ந்த ஆதி விலங்கினங்களிலிருந்தும், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றியும் கிளைத்த இனங்கள்தாம் குரங்குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின முதனி வகைகள். முதனிகள் மரங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னமும் சில முதனிகள் இம்முப்பரிமாண வாழ்விடங்களுக்கேற்ப தங்கள் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முதனிகள் மரத்தில் தொங்கி வாழ்பவையாகவே உள்ளன. உயிரின வகைப்பாட்டியலில் முதனிகள் ஈரமூக்கு கொண்டவை, ஸ்டெப்சிரினீ, வறண்டமூக்கு கொண்டவை ஹேப்லோரினீ இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.[1]
முதனிகளில் மனிதன் நீங்கலாக[4],அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது 30 g (1 oz) ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் 200 kg (440 lb)க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் 635 kg (1,400 lb) ஆகவும் இருக்கும்.[5] படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டெயில்ஹர்டினா பேரினம் கொள்ளப்படுகிறது.[6] பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் பிலெசியாடாப்சிஸ் c. ஆகும்.[7] கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74  மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.[8][9][10][11]
வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்ளது.
மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன.
முதனிகளை ஆதிக்குரங்கினம் (புரோசிமியன்), மனிதக்குரங்கினம் (சிமியன்) என இரு வரிசையில் வகைப்படுத்தலாம். ஆதிக்குரங்கினங்களின் (புரோசிமியன்கள்) பண்புகள் என வகைப்படுத்தப்படுபவை ஆதி முதனிகளான மடகாஸ்கரில் வாழும் லெமூர்கள், தேவாங்குகள், பெருவிழிகளுடைய சிறு தேவாங்குகள் போன்றவற்றை ஒத்து காணப்படுகின்றன. அதே போன்று, குரங்குகள், மனிதக்குரங்குகள், மனிதர் போன்றவை மனிதக்குரங்கினத்திற்குள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், அண்மைய ஆய்வின்படி, வகைப்பாட்டியலறிஞர்கள் மேலும் முதனிகளை ஈரமூக்கு முதனிகள் (ஸ்ட்ரெப்சிரினீ), வறண்டமூக்கு முதனிகள் (ஹேப்ரிலோரினீ) என இரு துணைவரிசைகளில் வகைப்படுத்துகின்றனர். முதனிகளின் பரிணாமப் பரவல் வாலுள்ள தேவாங்குகளிலிருந்து வாலற்ற மனிதக்குரங்குகள், மனிதன் வரை விரிவடைந்துள்ளது.
முதனிகள் ஒரே மூதாதையரை ஒத்த பல பிரிவுகளாக பரிணமித்துள்ளன. இதனை "ஓரினபரிணாமக்கிளை" (மோனோபைலடிக்) என்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டுக்கிளையில் அதன் அறிவியற் பெயரும் (இடப்புறம்), பொதுப்பெயரும் (வலதுபுறம்) குறிப்பிடப்பட்டுள்ளது [12]
பிரைமடோமார்ஃபா
மனிதர் (பேரினம் ஹோமோ)
சிம்ப்பன்சிகள் (பேரினம் பான்)
கொரில்லாக்கள் (பேரினம் கொரில்லா)
ஒராங்குட்டான்கள் (துணைக்குடும்பம் பொங்கினே)
கிப்பன்கள் (குடும்பம் ஹைலொபேடிடே)
பண்டைய உலக மந்திகள் (பெருங்குடும்பம் செர்கோபிதெகோய்டியே)
புதிய உலக மந்திகள் (பார்வோடெர் ப்ளேதிரினீ)
டார்சியர்கள் (பெருங்குடும்பம் டார்சியோய்டியே)
லெமூர்கள் (பெருங்குடும்பம் லெமூராய்டியே)
லோரிசிடே தேவாங்கு(பெருங்குடும்பம் லோரிசோய்டியே)
முதனிகளின் பாலியலில் பால் ஈருருமையைக் கொண்டுள்ளன. அதாவது ஒரே இனத்தில் ஆண், பெண் பால் வேறுபாட்டுடன், சில உடற் சார்ந்த மாற்றங்களையும் கொண்டிருப்பதாகும். சான்றாக, அவற்றின் தோலின் நிறம்,[13] உடற் பருமன்,[14][15] மற்றும் கனைன் பற்களின் அளவு[16][17] முதலியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
முதனிகள் நாற்காலிகளாகவோ, இருகாலில் இடம்பெயர்பவையாகவோ, மரங்களில் தொங்கி, தாவி வாழ்பவையாகவோ, தவழ்பவையாகவோ, நடப்பவையாகவோ மற்றும் ஓடுபவையாகவோ ஓரிடத்திலிருந்து பாலூட்டிகளின் சிறப்பு உறுப்புகளான கை, கால்களின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவமே, அவற்றின் சமூகப் பண்புகள் தாம்,
முதனி (Primate) (/ˈpraɪmeɪt/ (கேட்க) PRY-mayt) (இலத்தீன்: "prime, முதன்மை") என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்கள் ஆகும். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மிதவெப்பமண்டலக் காடுகளிலுள்ள மரங்களில் தொங்கி தாவி வாழ்ந்த ஆதி விலங்கினங்களிலிருந்தும், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றியும் கிளைத்த இனங்கள்தாம் குரங்குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின முதனி வகைகள். முதனிகள் மரங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னமும் சில முதனிகள் இம்முப்பரிமாண வாழ்விடங்களுக்கேற்ப தங்கள் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முதனிகள் மரத்தில் தொங்கி வாழ்பவையாகவே உள்ளன. உயிரின வகைப்பாட்டியலில் முதனிகள் ஈரமூக்கு கொண்டவை, ஸ்டெப்சிரினீ, வறண்டமூக்கு கொண்டவை ஹேப்லோரினீ இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.
முதனிகளில் மனிதன் நீங்கலாக,அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது 30 g (1 oz) ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் 200 kg (440 lb)க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் 635 kg (1,400 lb) ஆகவும் இருக்கும். படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டெயில்ஹர்டினா பேரினம் கொள்ளப்படுகிறது. பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் பிலெசியாடாப்சிஸ் c. ஆகும். கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74  மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.
வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்ளது.
மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன.