பனிச்சிறுத்தை (Snow leopard, Uncia uncia அல்லது Panthera uncia) என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளின் மலைகளில் காணப்படுகிறது. இந்த உயிரினங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் இவை எந்த வகை உயிரினம் என்ற நிலைப்பாடு இன்னும் ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்காத வரையில் துல்லியமாக கூற முடியாது.
இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய ஆசியாவில் இருக்கும் உயரமான மலைப்பாறைத் தொடர்களில் கடல் மட்டத்திற்கு மேல் 3000லிருந்து 5500மீட்டர்களுக்கு இடையில் வாழ்கின்றன. எவ்வாறிருப்பினும், அவற்றைப் பற்றி கண்டறியப்படாமல் இருக்கும் பல விஷயங்களால், அவற்றின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அறியப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதினும், காடுகளில் 3,500-த்திற்கும் 7,000-த்திற்கும் இடையிலான பனிச்சிறுத்தைகளும், உலகளவில் மிருகக்காட்சிசாலைகளில் 600 முதல் 700 வரையிலான பனிச்சிறுத்தைகளும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.[3]
ஏனைய பெரிய பூனைகளை விட பனிச்சிறுத்தைகள் சிறியவையாகவே இருக்கின்றன. ஆனால் இவை அந்த பெரிய பூனைகளைப் போலவே இருக்கின்றன. பல அளவுகளில் காணப்படும் இவை பொதுவாக 27 and 54 கிலோகிராம்கள் (60 and 120 lb)க்கு இடையிலான எடையில் இருக்கும். உடல் நீளம் 75 to 130 செண்ட்டிமீட்டர்கள் (30 to 50 in)இல் இருந்து வேறுவேறு அளவுகளில் இருக்கும். சுமார் அதே அளவு நீளத்திற்கு இவற்றின் வால்களும் நீண்டிருக்கும்.[4]
பனிச்சிறுத்தைகள் நீண்ட தடித்த ரோமங்களைக் கொண்டிருக்கும். இவற்றின் அடிப்படை நிறம், சில இடங்களில் வெள்ளையுடன் கூடிய, புகைபோன்ற சாம்பல் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் போன்று மாறுபட்டு காணப்படும். இவற்றின் தலையில் கரும்பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகளும், அவற்றின் கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகளும், உடலில் கரும்பழுப்பு, கருப்புநிற ரோசாப்பூ இதழ் அளவிற்கு புள்ளிகளும் காணப்படுகின்றன.[4]
பனிமலைச்சூழலில் வாழ்வதற்கேற்ப பனிச்சிறுத்தைகள் பல்வேறு மாற்றங்களை ஏற்றுகொண்டிருக்கின்றன. பருத்த உடலைக் கொண்டிருக்கும் இவற்றின் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். அவற்றின் காதுகள் சிறியதாகவும், சுருண்டும் இருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைக்க உதவுகின்றன. பரந்திருக்கும் அவற்றின் பாதங்கள், பனியில் நடப்பதற்கு வசதியாக அவற்றின் எடையை உடல் முழுக்க பகிர்ந்து அளிக்கின்றன. மேலும் அவற்றின் அடிப்பரப்பிலும் பனிச்சிறுத்தைகளுக்கு ரோமங்கள் இருக்கின்றன. இது சரிவுகளிலும், ஸ்திரமற்ற தளங்களிலும் அவற்றின் உராய்வை அதிகரிக்கின்றன. அத்துடன் வெப்ப இழப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பனிச்சிறுத்தைகளின் வால்கள் நீளமாகவும், இலகுதன்மையுடனும் இருக்கும். இவை அவற்றின் சமநிலையைப் பராமரிக்க அவற்றிற்கு உதவுகின்றன. வாலும் கூட மிக அடர்த்தியான ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், அவை தூங்கும் போது அவற்றின் முகத்தை மறைக்க ஒரு போர்வை போலவும் பயன்படுகின்றன.[4][5]
பனிச்சிறுத்தைகள் அவற்றின் தாய்நாடுகளில், ஷான் (லடாக்கி), இர்வெஸ் (மொங்கோலியம்: ирвэс), பார்ஸ் அல்லது பேரிஸ் (கசாக்கு: барыс /ˈbɑrəs/) மற்றும் பர்ஃபானியா சீத்தா - "ஸ்னோ சீத்தா" (உருது) என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அதிகளவில் பதுங்கி இருக்கும் குணத்தைக் கொண்டிருப்பதால், இவை மிகவும் ஏமாற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதுடன், பெரும்பாலும் தனிமையிலேயே இருக்கின்றன. பனிச்சிறுத்தைகள் இரவு நேரங்களிலும், அத்துடன் அந்திப்பொழுதின் மங்கலான வெளிச்சத்திலும், அதிகாலை நேரத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இமாலயம் மற்றும் கரகோரம், திபெத் பீடபூமி மற்றும் குன்லுன் பகுதிகளிலும்; இந்து குஷ், பமீர்கள் மற்றும் டியன் ஷா; சீனா, கஜகிஸ்தான் மற்றும் ரஷ்ய எல்லையருகில் இருக்கும் மங்கோலிய எல்லையை வரையறுக்கும் அல்டே சிகரங்கள்; பைக்கால் ஏரியின் மேற்கில் இருக்கும் சயான் தொடர்கள் உள்பட 12 நாடுகளின் சுமார் ஒரு மில்லியன் சதுர மைல்களில் இவை வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.[4][5]
பனிச்சிறுத்தைகள் உவையுரு நாவடி எலும்பின் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் கூட, இவை உறுமுவதில்லை. பெரிய பூனைகள் உறும வேண்டுமானால் இந்த எலும்புவளர்ச்சி இருக்க வேண்டும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் உறுமுவதென்பது பிற விலங்கு-தவார வடிவயியல் பண்பல்லாமல் பிற காரணங்கள், குறிப்பாக குரல்வளை சம்பந்தப்பட்டதாகும் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது பனிச்சிறுத்தைகளில் காணப்படவில்லை.[6][7] சீறொலி செய்வது, வேடிக்கையான ஒலி, மியாவ் ஒலிசெய்தல், முறுமுறுப்பு மற்றும் புலம்பல் போன்ற ஒலிகளை பனிச்சிறுத்தை எழுப்புகிறது.
கடந்த காலத்தில், உயிரின பகுப்பாய்வாளர்கள் பனிச்சிறுத்தையைப் பான்தெரா (Panthera) இனத்தில், ஏனைய பிற பெரிய நடப்பிலிருந்த பூனையினங்களோடு சேர்த்திருந்தார்கள். ஆனால் பின்னர் இது அதன் சொந்த இனமான உன்சியா (Uncia) என்பதில் சேர்க்கப்பட்டது. இது சிறுத்தையோடு (பான்தெரா பார்டஸ் ) நெருக்கமாக தொடர்புடையதல்ல என்று கருதப்பட்டது. எவ்வாறிருப்பினும், சமீபத்திய ஒரு மூலக்கூறு ஆய்வு இவற்றை பான்தெரா இனத்தோடும், புலிகள் (பான்திரா டிக்ரிஸ் ) இவற்றின் நெருக்கமான இனம் என்றும் சேர்த்து கொண்டிருக்கிறது. இதன் நடப்பிலிருக்கும் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்றபோதினும், பல ஆதாரங்கள் இன்றும் இவற்றை உன்ஷியா என்றே கருதுகின்றன. இதுகுறித்து மேற்கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.[8]
சில துணைஉயிரினங்கள் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வதாக கூறப்படுகின்றன. இவை வலதின் டாக்சோபாக்ஸில் துணைஉயிரினங்களின் கீழ் பட்டியலிடப்படுகின்றன. மேற்படி மதிப்பீடு தேவைப்படும் U. u. பைகாலென்சிஸ்-ரோமானி யின் (baikalensis-romanii) சாத்தியப்பட்ட விதிவிலக்குடன், இந்த துணைஉயிரினங்களுக்கு பொதுவாக மதிப்பளிக்கப்படுவதில்லை.[2] எவ்வாறிருப்பினும், உலகின் பாலூட்டிகளைப் பற்றிய கையேடு இரண்டு துணைஉயிரிகளை அங்கீகரிக்கிறது. அவையாவன: U. u. உன்ஷியா (U. u. uncia), இது மத்திய வடமேற்கிலிருந்து மங்கோலியா மற்றும் ரஷ்யா வரையில் இருக்கிறது; மற்றும் U. u. உன்சியோய்டெஸ் (U. u. uncioides), இவை மேற்கு சீனா மற்றும் இமாலயத்தில் இருக்கின்றன.[9] இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்கு ஆசியா மலைத்தொடர்களில் கரடுமுரடான மலை பிரதேசங்களில், தோராயமாக1,230,000 ச.கி.மீs (470,000 sq mi) பின்வரும் பன்னிரெண்டு நாடுகளில் விரிந்திருக்கின்றன: ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான். கிழக்கத்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஷேர் தார்யாவில் இருக்கும் ஹிந்துகுஷில் இருந்து பமீர் மலைகளின் மலைத்தொடர்கள், தியன் ஷான், கராகோரம், காஷ்மீர், குன்லுன், மற்றும் தெற்கு சைபீரியாவிற்கான இமாலயா, இங்கே ரஷ்ய அல்டாய் மலைகளிலும், சாஜன், தன்னு-ஓலா மலைகள் மற்றும் பைகல் ஏரியின் மேற்கில் இருக்கும் மலைகள் முழுவதிலுமான நிலப்பரப்பில் இவை பரவி இருக்கின்றன. மங்கோலியாவில், மங்கோலியன் மற்றும் கோபி அல்டாயிலும் மற்றும் கன்காய் மலைகளிலும் காணப்படுகின்றன. திபெத்தில், இவை வடக்கில் அல்டெய்-தாஹ்ஹில் காணப்படுகின்றன.[12]
இலத்தீனிய இனப்பெயரான உன்ஷியா வும், சிலவேளைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலப் பெயரான "அவுன்ஸ் " (ounce) என்ற இரண்டுமே பழைய பிரெஞ்சில் இருந்து பெறப்பட்டவையாகும். இது அடிப்படையில் ஐரோப்பிய பூனையின வகைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். "ஒன்ஸ் " (Once) என்பது அதற்கு முந்தைய வார்த்தையான "லொன்ஸ் " (lonce) என்பதிலிருந்து பின்-உருவாக்க வகையில் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. "லொன்ஸ் " (lonce) என்பதில் இருக்கும் "L" என்பது "லீ " (le) ("the") என்பதன் சுருக்கமாக அமைக்கப்பட்டது. இது "ஒன்ஸ் " (once) என்பதை விலங்கின் பெயராக ஊகிக்க இட்டுச் செல்கிறது. இது, ஆங்கில பதிப்பு "அவுன்ஸ்" போலவே, பிற சிறிய அளவுடைய பூனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது, அத்துடன் தவிர்க்க முடியாமல் பனிச்சிறுத்தைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.[10][11]
இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்கு ஆசியா மலைத்தொடர்களில் கரடுமுரடான மலை பிரதேசங்களில், தோராயமாக1,230,000 சதுர கிலோமீட்டர்கள் (470,000 sq mi) பின்வரும் பன்னிரெண்டு நாடுகளில் விரிந்திருக்கின்றன: ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்.
கிழக்கத்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஷேர் தார்யாவில் இருக்கும் ஹிந்துகுஷில் இருந்து பமீர் மலைகளின் மலைத்தொடர்கள், தியன் ஷான், கராகோரம், காஷ்மீர், குன்லுன், மற்றும் தெற்கு சைபீரியாவிற்கான இமாலயா, இங்கே ரஷ்ய அல்டாய் மலைகளிலும், சாஜன், தன்னு-ஓலா மலைகள் மற்றும் பைகல் ஏரியின் மேற்கில் இருக்கும் மலைகள் முழுவதிலுமான நிலப்பரப்பில் இவை பரவி இருக்கின்றன. மங்கோலியாவில், மங்கோலியன் மற்றும் கோபி அல்டாயிலும் மற்றும் கன்காய் மலைகளிலும் காணப்படுகின்றன. திபெத்தில், இவை வடக்கில் அல்டெய்-தாஹ்ஹில் காணப்படுகின்றன.[12]
கோடைகாலத்தில், பனிச்சிறுத்தைப் பொதுவாக மலைப்புற்களின் மரவரிசைகளுக்கு மேலேயும், 2700 மீ முதல் 6000 மீ உயர மலைப்பிரதேசங்களிலும் வாழ்கின்றன. குளிர்காலத்தில், 1200 மீ முதல் 2000 மீ உயரத்திலிருக்கும் காடுகளுக்கு இறங்கி வருகின்றன. மலைக்குகைகளில் குட்டிகளைத் தாய் பனிச்சிறுத்தைகள் தாங்கி பிடித்து கொண்டிருந்தாலும் கூட, இவை பெரும்பாலும் தனிமையான வாழ்க்கையே வாழ்கின்றன.
ஒரு தனிப்பட்ட பனிச்சிறுத்தை ஒரு நல்ல வசதியான வீட்டில் வாழ்வது போல வாழ்கிறது. ஆனால் பிற பனிச்சிறுத்தைகள் இவற்றின் பிராந்தியங்களுக்குள் அத்துமீறி நுழைந்தாலும், இவை அவற்றின் பிராந்தியங்களை ஆக்ரோஷமாக பாதுகாக்க முயற்சிப்பதில்லை. வீடுகள் பெரும்பாலும் அளவுகளில் வேறுபடுகின்றன. வேட்டையாடுதல் மறுக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில், வீட்டு அளவு 12 km2 (5 sq mi) இல் 40 km2 (15 sq mi) இருந்து வரைக்கும் இருக்கக் கூடும். ஒவ்வொரு 100 km2 (39 sq mi)-க்கும் ஐந்திலிருந்து பத்து விலங்குகள் வரை காணப்படுகின்றன; நெருக்கமற்ற இரைகளுடன் வாழ்விடங்களில், 1,000 km2 (386 sq mi) அளவிலான இடம் இந்த பூனைகளின் ஐந்திற்கு மட்டுமே ஆதரவளிக்கிறது.[6]
பனிச்சிறுத்தைகள் மங்கலான வெளிச்சத்தில் வாழக்கூடியவை. இவை அதிகாலைப்பொழுதிலும், அந்திநேரத்திலும் அதிக சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவையாகும்.[4]
பனிச்சிறுத்தைகள் மாமிசஉண்ணிகளாகும். அத்துடன் அவற்றின் இரையை வெறியுடன் வேட்டையாடக் கூடியவையும் ஆகும். எவ்வாறிருப்பினும், ஏனைய அனைத்து பூனைகளையும் போலவே, இவையும் சந்தர்ப்பத்திற்கேற்ப உண்ணும் இயல்புடையன. அழுகிய உடல்கள் மற்றும் உள்ளூர் சேமிப்புமாமிசங்கள் உட்பட எந்தவகையான மாமிசத்தையும் இவை சாப்பிடக்கூடியவையாகும். அவற்றைவிட மூம்மடங்கு பெரிய மிருங்கங்களையும் கூட கொல்லக்கூடிய திறமை படைத்த இவை, முயல்கள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய இரையையே தேவைப்படும் போது எடுத்துக்கொள்கின்றன.[5]
பனிச்சிறுத்தையின் உணவு பழக்கம், ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு வகையில் வேறுபடுகிறது. அத்துடன் சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் இரையையும் இவை சார்ந்திருக்கின்றன. இமாலயங்களில் பெரும்பாலும் இவை பாரல்களை (பாரல் - இமாலய நீலநிற ஆடு) இரையாக புசிக்கும். ஆனால் கராகோரம், தியன் ஷான், மற்றும் அல்தாய் போன்ற பிற மலைத்தொடர்களில் சைபீரிய ஐபிக்ஸ் (ibex) மற்றும் அர்காலி (ஒருவகையான காட்டு வெள்ளாடு) போன்றவையே இதன் முக்கிய இரையாக இருக்கிறது. பனிச்சிறுத்தைகள் வாழும் பல பாகங்களில் இவை அரிதாகவே கிடைக்கின்றன என்றபோதினும் அவை அதையே இரையாக எடுத்துக்கொள்கின்றன.[4][13] பல்வேறு வகையான காட்டு ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் (முறுக்கிய கொம்பு கொண்ட ஆடு மார்கோர்கள் மற்றும் தாடிவைத்த சிவப்புநிற ஆடு போன்றவை), இமாலய தாஹ்ர் மற்றும் கோரல்கள், பிளஸ் மான், காட்டுப்பன்றிகள் மற்றும் லங்கூர் குரங்குகள் போன்ற பிற ஆடு போன்ற அசைபோடும் விலங்குகள் உட்பட பெரிய விலங்குகளையும் இது சாப்பிடுகிறது. மார்மோட்கள், ஊலி ஹேரே, பிகா, பல்வேறு ரோடென்ட், மற்றும் பனிச்சேவல் மற்றும் சூகார் போன்ற பறவைகள் ஆகியவையே இவற்றின் சிறிய உணவுகளாக இருக்கின்றன.[4][5][13][14]
உள்ளூர் சேமிப்புமாமிசங்களைச் சாப்பிடுவதில் இவை அதிக விருப்பம் காட்டுவதில்லை. இது அவற்றிற்கு மனிதர்களோடு நேரடியான முரண்பாட்டை கொண்டு வந்துவிடுகிறது. வேட்டையடுவோர், அவர்களின் மிருகங்களை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பனிச்சிறுத்தைகளை கொல்கிறார்கள்.[5]
பனிச்சிறுத்தைகள் இரையை வேட்டையாடுவதற்காக மேலே பதுங்கி காத்திருக்கும். இரையை கண்டவுடன் 14 மீட்டர்கள் (46 ft) உயரத்திலிருந்தும் குதித்து கீழே ஓடிவரும்.[15]
பனிச்சிறுத்தைகள் பொதுவாக குளிர்காலத்தின் இறுதிப்பகுதிகளில் தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றிற்கு 90 முதல் 100 நாட்கள் வரை சூல்கொள்ளும் காலமாக இருக்கிறது. இவை ஒரே ஈற்றில் ஐந்து குட்டிகள் வரை ஈன்றெடுக்கக்கூடியவையாகும். ஆனால் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் தான் ஈன்றெடுக்கின்றன. குட்டிகள் சுமார் 18-22 மாதங்கள் வரைக்கும், அதாவது சுதந்திரமாக நடமாட தொடங்கும் வரைக்கும், தாயுடனேயே இருக்கும். வழக்கமாக பனிச்சிறுத்தைகள் 15-18 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவையாகும். ஆனால் சிறைகூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ்கின்றன.
2003-ஆம் ஆண்டு மெக்கார்தே எட் அல்லினால் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி, காட்டில் 4,080-இல் இருந்து 6,590 வரையிலான பனிச்சிறுத்தைகளே வாழ்கின்றன என்று கண்டறியப்பட்டது. (கீழே அட்டவணையைப் பார்க்கவும்) இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை குத்துமதிப்பானவை என்பதுடன் மதிப்பிழந்தவையாகவும் இருக்கின்றன.[1]
1972-ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பு (IUCN), உலகளவில் அழியக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் பனிச்சிறுத்தையையும் சேர்த்தது; இதே அச்சுறுத்தல் வகைப்பாடு 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டிலும் பொருத்திக்காட்டப்பட்டது.
உலகமெங்கும் மிருகக்காட்சிசாலைகளில் 600-700 பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன.[16]
பாதுகாக்கப்பட்ட பகுதிகள்:
பனிச்சிறுத்தையின் உயிர்வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காகவும், கூண்டுகளில் பனிச்சிறுத்தைகள் நல்லமுறையில் குட்டிகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் ஒரே ஈன்றெடுப்பில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆனால் சில சமயங்களில் ஏழு குட்டிகள் வரை கூட பெற்றெடுக்கும்.
பனிச்சிறுத்தையைக் காப்பாற்றவும், அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கும் அவை வாழும் மலைவாழ் சுற்றுசூழல்களையும் காப்பாற்ற பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. பனிச்சிறுத்தை அறக்கட்டளை, பனிச்சிறுத்தை சரணாலயம் மற்றும் பனிச்சிறுத்தை பிணையம் ஆகியவை இதில் உள்ளடங்கும். பனிச்சிறுத்தைகளுக்கான இந்த குழுக்களும், பல தேசிய அரசாங்கங்களும், உலகெங்கிலும் உள்ள இலாபநோக்கமற்றவர்களும் மற்றும் நன்கொடை வழங்குனர்களும் சமீபத்தில் பெய்ஜீங்கில் ஒன்றுகூடி 10வது சர்வதேச பனிச்சிறுத்தைகள் மாநாட்டை நடத்தினார்கள். பனிச்சிறுத்தைகள் வாழும் பிராந்தியங்களில் ஆராய்ச்சி மற்றும் சமூக திட்டங்கள் மீதான ஒருமுனைப்பானது, அந்த பூனையின் தேவைகள், அத்துடன் பனிச்சிறுத்தைகளின் வாழ்க்கையையும், பழக்கத்தையும் பாதிக்கும் கிராமவாசிகளின் மற்றும் மந்தை மேய்ப்பாளர்களின் தேவைகளை நோக்கமாக கொண்டிருக்கிறது.[21][22]
மத்திய ஆசியாவின் துர்கிக் மக்களுக்கு பனிச்சிறுத்தைகள் அர்த்தப்பூர்வமான குறியீட்டைக் கொண்டிருக்கிறது, இங்கே இந்த மிருகம் ஐர்பிஸ் அல்லது பார்கள் என்று அறியப்படுகின்றன. ஆகவே இது பறைகளில் பரந்தளவில் மரபுச்சின்னமாக பயன்படுத்தப்பட்டன.
பனிச்சிறுத்தைகள் (பறைகளில் இவை அவுன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன) (அக் பார்கள்) தடார்களுக்கும் மற்றும் கஜகிஸ்தானியர்களுக்கும் தேசிய சின்னமாக இருக்கின்றன: அல்மாட்டி நகரத்தின் உத்தியோகப்பூர்வ முத்திரையிலும் பனிச்சிறுத்தைக் காணப்படுகிறது. மேலும்தடார்ஸ்தனின் ஆயுத முலாம்களிலும் சிறகுடன் கூடிய பனிச்சிறுத்தை காணப்படுகிறது. வடக்கு ஓசீடியா-அலானியாவின் ஆயுத மூலாம்களிலும் இதேபோன்ற ஒரு சிறுத்தை காணப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஐந்து 7000 மீட்டர் சிகரங்களையும் அளந்த, சோவியத் மலையேறுபவர்களுக்கு பனிச்சிறுத்தை விருது வழங்கப்பட்டது. மேலும், கிர்கிஜ்தானின் பெண் சாரணியர் அமைப்பின் சின்னமாகவும் பனிச்சிறுத்தையின் முத்திரை அளிக்கப்பட்டிருக்கிறது.
பனிச்சிறுத்தை (Snow leopard, Uncia uncia அல்லது Panthera uncia) என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளின் மலைகளில் காணப்படுகிறது. இந்த உயிரினங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் இவை எந்த வகை உயிரினம் என்ற நிலைப்பாடு இன்னும் ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்காத வரையில் துல்லியமாக கூற முடியாது.
இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய ஆசியாவில் இருக்கும் உயரமான மலைப்பாறைத் தொடர்களில் கடல் மட்டத்திற்கு மேல் 3000லிருந்து 5500மீட்டர்களுக்கு இடையில் வாழ்கின்றன. எவ்வாறிருப்பினும், அவற்றைப் பற்றி கண்டறியப்படாமல் இருக்கும் பல விஷயங்களால், அவற்றின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அறியப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதினும், காடுகளில் 3,500-த்திற்கும் 7,000-த்திற்கும் இடையிலான பனிச்சிறுத்தைகளும், உலகளவில் மிருகக்காட்சிசாலைகளில் 600 முதல் 700 வரையிலான பனிச்சிறுத்தைகளும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.