மைசூர்ப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இவை வில்லை (lens) வடிவிலான உண்ணப்படும் பகுதியான விதைகளைக் கொண்டிருக்கும்.
இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்தியாதான் இதன் தாயகம் எனக் கருதப்பட்ட போதிலும், தற்போது உலகில் இது அதிகமாக விளைவிக்கப்படுவது கனடா நாட்டிலாகும். ஆரம்பத்தில் இந்தியாவில்தான் அதிகளவில் உற்பத்தியாக்கப்பட்டது[1]. ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கனடாவில் அதிக உற்பத்தி பெறப்படுகின்றது[2].
மைசூர்ப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அதிக புரதச் சத்து உண்டு. இவை வில்லை (lens) வடிவிலான உண்ணப்படும் பகுதியான விதைகளைக் கொண்டிருக்கும்.
இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்தியாதான் இதன் தாயகம் எனக் கருதப்பட்ட போதிலும், தற்போது உலகில் இது அதிகமாக விளைவிக்கப்படுவது கனடா நாட்டிலாகும். ஆரம்பத்தில் இந்தியாவில்தான் அதிகளவில் உற்பத்தியாக்கப்பட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கனடாவில் அதிக உற்பத்தி பெறப்படுகின்றது.