மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். மின்மினி பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியாகும். மின்மினி பூச்சிகளில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.[1]
மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும்.[2]
குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கிறது. இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும்.[3] இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும். மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்.
ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை செய்கிறது. ஆண்பூச்சி சைகைக்கு 2.1 விநாடிகளுக்கு பின் பதில் சைகை செய்கிறது பெண் பூச்சி. இதில் பெண் பூச்சி கொடுக்கும் ஒளி பிலிவு குறைந்து காணப்படுகிறது. இப்பூச்சிகள் பகலில் மட்டுமே இணை சேரும். இப்பூச்சிகளை, தவளைகள் அதிகமாக உணவாக உட்கொள்கின்றன. இப்புச்சிக்கு பிடித்த உணவு நத்தை ஆகும்.[4]
மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். மின்மினி பூச்சிகள் வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியாகும். மின்மினி பூச்சிகளில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும்.
குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கிறது. இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, நீரைக் குடிப்பது போல உறிஞ்சிவிடும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும். மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்.
ஆண் பூச்சி 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளியால் பெண் பூச்சிகளுக்கு சைகை செய்கிறது. ஆண்பூச்சி சைகைக்கு 2.1 விநாடிகளுக்கு பின் பதில் சைகை செய்கிறது பெண் பூச்சி. இதில் பெண் பூச்சி கொடுக்கும் ஒளி பிலிவு குறைந்து காணப்படுகிறது. இப்பூச்சிகள் பகலில் மட்டுமே இணை சேரும். இப்பூச்சிகளை, தவளைகள் அதிகமாக உணவாக உட்கொள்கின்றன. இப்புச்சிக்கு பிடித்த உணவு நத்தை ஆகும்.
ஒளி ஒலிக்காட்சி