கொறிணி (Rodent)[1] அல்லது கொறிப்பி உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். மேலும், கொறிப்பி (Rodent) (from இலத்தீன் rodere, "கொறி") என்பது கொறிப்பன வரிசையில் அமைந்த பாலூட்டி உயிரியாகும்; இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. பாலூட்டிகளில் 40% கொறிப்பிகளே; இவை பரவலாக பேரெண்ணிக்கையில் அண்டார்ட்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் பரவியுள்ளன. இவை, மாந்தர் வாழிடம் உட்பட, அனைத்து தரைவாழிடங்களிலும் வாழும் பன்முகப்பட்டு பெருகிய பாலூட்டி வரிசையாகும். நீரெலி என்னும் பீவர் பெரிய மரத்தையும் முன்னம்பற்களால் கொறித்தே கீழே விழச்செய்து நீரில் பாலம் அமைக்கும் திறம் படைத்தது. உலகில் ஏறத்தாழ 2000 வகை கொறிப்பிகள் இருப்பதாகக் கூறுவர். தென் அமெரிக்காவில் உள்ள காப்பிபரா என்னும் பேரெலி வகை சற்றேறத்தாழ 1.2 மீ (4 அடி) நீளம் கொண்டுள்ளது.
கொறிப்பி இனங்கள் மரத்திலோ புதரிலோ நீர்ச்சதுப்பிலோ வாழவல்லன. நன்கறிந்த கொறிப்பிகளில் வீட்டெலி, வயலெலி, அணில்கள், பிரெய்ரி நாய்கள் முள்ளம்பன்றிகள், நீரெலிகள், கினியா பன்றிகள். மூங்கில் அணத்தான்கள், காபிபராக்கள், ஆம்சுட்டர்கள் (hamsters), கெருபிகள் (gerbils) ஆகியன அடங்கும். முன்பு, இவற்றில் முன்வெட்டுப் பற்கள் வளரும் முயல்களும் மான்களும் பிக்காக்களும் சேர்க்கப்பட்டிருந்தன; ஆனால் இவை இப்போது இலாகொமார்ப்பா எனும் தனி வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும், இவை ஒரு பொதுமூதாதையில் இருந்து தோன்றிய உடன்பிறப்புக் குழுக்களே. இவை கிளிரேசு கவையில் அடங்குகின்றன.
பெரும்பாலான கொறிப்பிகள் நீண்ட வாலும் குறுங்கால்களும் பேருடலும் வாய்ந்த சிறிய விலங்குகளே.இவை உணவைக் கொறிக்கவும் புற்றுகளைத் தோண்டவும் தற்காப்புக்கும் முன்வெட்டுப் பற்களைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை கொட்டைகளையும் மரப்பொருட்களையும் தின்னுகின்றன என்றாலும் சில பலவகை உணவுகளை ஏற்கின்றன. இவை சமூக விலங்குகளாகும். பல கொறிப்பி இனங்கள் தம் சமூகக் குழுக்களில் சிக்கலான பலவழிமுறைகளில் தொடர்பு கொள்கின்றன. கொறிப்பன தனி இணை முயக்கமுறை, பலவிணை முயக்கமுறை, குழுஇணை முயக்கமுறை ஆகிய பல முறைகளில் புணர்கின்றன. இவற்றின் பிறப்பில் வளராத குட்டிகளும் முதிர்நிலை முற்றுயிரிகளும் இணையாக உடனமைகின்றன.
தொல்லுயிரிக் காலத்தில் இருந்தே மீப்பெருங்கண்டமாகிய இலாரேசியாவிலேயே புதைபடிவங்களாக கிடைத்துள்ளன. புத்துயிரிக் காலத்தில் இவை பன்முகப்பட்டு அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியது மட்டுமன்றி, கடல்களையும் தாண்டி ஓசியானாவிலும் புகுந்துள்ளன. இவை ஆப்பிரிக்காவில் மடகாசுகரில் இருந்து, தென் அமெரிக்காவுக்கும் சென்று பரவியுள்ளன. ஆத்திரேலியாவில் தரைவாழிகளாகப் பரவிய ஒரே தொப்புள்கொடி பாலூட்டி இனமாக கொறிப்பிகள் மட்டுமே அமைகின்றன.
கொறிப்பிகள் உணவுக்கும் உடைக்கும் செல்ல வளர்ப்புக்கும் ஆராய்ச்சிக்கு ஆயவக விலங்குகளாகவு பயன்படுகின்றன. பழுப்பெலி, கருப்பெலி, வீட்டெலி போன்ற சில இனங்கள் மாந்தர் திரட்டிவைத்த உணவை உண்டு அழிக்கின்றன; நோய்களைப் பரப்புகின்றன. தற்செயலாக புது வாழிடங்களில் அறிமுகப்படுத்தப்படும் கொறிப்பி இனங்ங்கள் முற்றுகை இனங்களாக்க் கருதப்படுகின்றன. இவை நிலத்துக் கொன்றுண்னிகளிடம் இருந்து தனித்து வாழ்ந்த தீவுப் பறவைகள் போன்ற பல உயிரினங்களை அழித்துள்ளன.
கொறிப்பிகளின் தெளிவான கூறுபாடு தொடரந்ண்டு வளரும் உளிக்கூர்மை வாய்ந்த இணைவெட்டுப் பற்களாகும்..[2] இந்த வெட்டுப்பற்களின் முகப்புப் பரப்பு தடித்த அடுக்குக் காறையாலும் பின்பரப்பு மெல்லடுக்குக் காறையாலும் ஆனவையாக உள்ளன.[3]
மிக நெருக்கமான இனங்களிலும் கொறிப்பிகளின் பான்மை வேறுபாடுகள் பன்முகமானவையாக அமைகின்றன. பல கொறிப்பிகளின் பான்மைகள் கீழே பட்டியலில் தரப்படுகின்றன.[4]
பாலூட்டிகளில் பெருங்குழுவாகவும் மிகப் பரவலாகவும் அமையும் கொறிப்பிகள், அண்டார்ட்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. மாந்தரின் குறுக்கீடின்றி, இவை ஆத்திரேலியாவிலும் நியூகினியாவிலும் தரையில் வாழும் ஒரேயொரு தொப்புள்கொடி பாலூட்டிகளாகும்.மாந்தரும் இவ்வகை விலங்குகள் நெடுந்தொலைவு ஓசியானிக தீவுகளில் பரவக் காரணமாக இருந்துள்ளனர் (எ.கா., பாலினேசிய எலிகள்.)[14] கொறிப்பிகள் பனிவெளிகளில் இருந்து உயர்வெப்ப பாலைவெளிகள் வரை அனைத்து தரை வாழிடங்களிலும் தகவமைந்து வாழ்கின்றன.
Boreoeutheria
Laurasiatheria
Lagomorpha
Ochotona (Old World rabbits)
Sylvilagus (New World rabbits)
Hystricomorpha
Ctenodactylus (gundis)
Atherurus (brush-tailed porcupines)
Octodontomys (mountain degus)
Erethizon (North American porcupines)
Cavia (guinea pigs)
Sciuromorpha
Aplodontia (mountain beavers)
Glaucomys (New World flying squirrels)
Tamias (chipmunks)
Castorimorpha
Castor (beavers)
Dipodomys (kangaroo rats)
Thomomys (pocket gophers)
Muroidea
Peromyscus (deer mice)
Mus ([true] mice)
எலி (rats)
Sicista (birch mice)
Zapus (jumping mice)
Cardiocranius (pygmy jerboas)
பேபரின் ஆய்வுவழி கொறிப்பிகளின் குடும்பங்கள் (2012).[15]
கொறிப்பன வகைபாடுகொறிப்பன
Sciuromorpha
Ctenohystrica
Ctenodactylomorpha
Bathyergomorpha
Cavioidea
Chinchilloidea
Castorimorpha
Castoroidea
Anomaluromorpha
Dipodoidea
சில கொறிப்பிகள் வேளான்பொருள்களை அழிக்கின்றன; மேலும் பேரளவில் திரட்டிவைத்த விளைபொருள்களையும் தின்றே தீர்க்கின்றன.[16] எடுத்துகாட்டாக, 2003 இல் ஆசியாவில் உள்ள எலிகளும் சுண்டெலிகளும் 200 மில்லியன் மக்களுக்கான உணவைத் தீர்த்துள்ளன. பெரும்பாலான உணவு அழிப்புகள் ஒப்பீட்டலவில் மிக் குறைந்த எண்ணிக்கை உயிரினங்களாலேயே, குறிப்பாக எலிகளாலும் சுண்டெலிகளாலுமே ஏற்படுகிறது.[17]இந்தோனேசியாவிலும் தான்சானியாவிலும், கொறிப்பிகள் 15% பயிர்விளைச்சலைக் குறைக்கின்றன; தென் அமெரிக்காவில் இவை 90% பயிர்விளைச்சலைத் தின்றே தீர்க்கின்றன. ஆப்பிரிக்காவில்மாசுட்டோமீசு, ஆர்விகாந்தீசு உள்ளடங்கிய கொறிப்பிகள் கூலங்கள், வேர்க்கடலை, காய்கறிகள், தேங்காய்கள் ஆகியவற்றை அழிக்கின்றன. ஆசியாவில், எலிகளும் சுண்டெலிகளும் ஒத்த பிறவும் சேர்ந்து, நெற்பயிர், சோளம், கிழங்குகள், காய்கறிகள், கொட்டைகள் ஆகியவற்றை அழிக்கின்றன. இப்பணியில் மைக்கிரோதசு பிராந்தித், இயோசுபலாக்சு பைலேயி, மெரியோனசு உங்குவிலேட்டசு, ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. ஐரோப்பாவில், மைக்கிரோட்டசு, அப்போடெமசு உயிரினங்களும் எலிகளும் சுண்டெலிகளும், சிலவேளைகளில் ஆர்விக்கோலா டெரசுட்டிரிசு ஆகியவை பூஞ்செடிகள், காய்கறிகள், புல்வெளிகள், கூலங்கள் ஆகிவற்றை அழிக்கின்றன. தென் அமெரிக்காவில், பல் கொறிப்பி இனங்கள், குறிப்பாக 'ஓலோச்சிலசு (Holochilus), அக்கோடான், கலோமிசு, ஒலிகோரிசோமிசு, பைலாட்டிசு, சிகுமோடான் , சிஅகோடோண்டோமிசு போன்ற உயிரினங்கள் கரும்பு, பழங்கள், காய்கறிகள், கிழங்குகள் ஆகியவற்றை அழிக்கின்றன.[17]
கொறிப்பிகள் நோய்பரப்பலில் கணிசமான பங்கு வகிக்கின்றன.[18] கருப்பெலிகள் தம்முடன் கொண்டுசெல்லும் வட எலியுண்ணிகள் வழியாக யெர்சினியா பெசுட்டிசு (Yersinia pestis) எனும் குச்சுயிரியைப் பரப்பி ஒருவகைப் பிளேக் நோயை பரப்புவதோடு,[19] டைப்பசு, வைல் நோய், டக்சோபிளாசுமாசிசு, டிரைக்கினாசிசு போன்ற நோய்களை உருவாக்கவல்ல உயிரிகளையும் தம்முடன் கொண்டுசெல்கின்றன.[20]பல கொறிப்பிகள் பூமாலை உள்ளடங்கிய அண்டாநச்சுயிரிகள், தோபிரவா நச்சுயிரிகள், சாரேமா நச்சுயிரிகள், ஆகிய தொற்றுதரும் நச்சுயிரிகளைக் கொண்டுசெல்கின்றன.[21] கொறிப்பிகள், பாபேசியாசிசு, தோல்சார் இலெழ்சுமசியாசிசு, மாந்தக் குறுணை அனாபிளாசுமாசிசு, இலைம் நோய், ஓம்சுக் மூளைக்காய்ச்சல், போவாசான் நச்சுயிரி, என்புருக்கியம்மை, தளர்த்து காய்ச்சல், கன்மலைப் பொட்டுக் காய்ச்சல், மேற்கு நைல் நச்சுயிரி ஆகிய நோய்களையும் உருவாக்குகின்றன.[22]
கொறிணி (Rodent) அல்லது கொறிப்பி உணவைக் கொறித்து தின்னும் விலங்குகளைக் குறிக்கும். மேலும், கொறிப்பி (Rodent) (from இலத்தீன் rodere, "கொறி") என்பது கொறிப்பன வரிசையில் அமைந்த பாலூட்டி உயிரியாகும்; இதன் மேல்தாடையிலும் கீழ்தாடையிலும் வளரும் ஓரிணை வெட்டுப்பற்கள் அமைந்துள்ளன. பாலூட்டிகளில் 40% கொறிப்பிகளே; இவை பரவலாக பேரெண்ணிக்கையில் அண்டார்ட்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் பரவியுள்ளன. இவை, மாந்தர் வாழிடம் உட்பட, அனைத்து தரைவாழிடங்களிலும் வாழும் பன்முகப்பட்டு பெருகிய பாலூட்டி வரிசையாகும். நீரெலி என்னும் பீவர் பெரிய மரத்தையும் முன்னம்பற்களால் கொறித்தே கீழே விழச்செய்து நீரில் பாலம் அமைக்கும் திறம் படைத்தது. உலகில் ஏறத்தாழ 2000 வகை கொறிப்பிகள் இருப்பதாகக் கூறுவர். தென் அமெரிக்காவில் உள்ள காப்பிபரா என்னும் பேரெலி வகை சற்றேறத்தாழ 1.2 மீ (4 அடி) நீளம் கொண்டுள்ளது.