dcsimg

தாழைக் கோழி ( tamoul )

fourni par wikipedia emerging languages

தாழைக்கோழியானது ஆங்கிலத்தில் Common Moorhen என்றழைக்கப்படுகிறது இது ஒரு நீர்க்கோழி வகையயாகும் Rallidaeகுடும்பத்தை சார்ந்தது,இது உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.

பெயர்கள்

தமிழில் :தாழைக் கோழி

ஆங்கிலப்பெயர் :Common Moorhen

அறிவியல் பெயர் :Gallinula chloropus [2]

உடலமைப்பு

32 செ.மீ. - தண்ணீரில் நீந்தும்போது வாத்துப் போலவும் தரையில் திரியும் போது கானான் கோழி போலவும் தோற்றம் தருவது. சிலேட் சாம்பல் நிற உடலைக் கொண்ட இதனை வாலடி வெள்ளையாக இருப்பது கொண்டு அடையாளம் காணலாம்.

காணப்படும் பகுதிகள் ,உணவு

தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. ஆணும் பெண்ணும் இணையாக நீர்ப்பரப்பின் மீது வாலை அசைத்தபடி வாத்தைப் போல நீந்தியவாறு தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றைத் தேடித்தின்னும், கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப் புதர்களை விட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் பழக்கம் முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும் திறமை குறைந்தது எனினும் இடம் பெயர நேரும் போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும். நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முயலும். க்க்ரீக் க்ரெக் ரெக் ரெக் என இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுக்கக் கேட்கலாம். [3]

இனப்பெருக்கம்

ஜுன் முதல் செப்டம்பர் வரை நீரருகே நாணல், தாழை புதர்களிடையே நீர்த்தாவரங்களைச் சேகரித்து மேடையிட்டு 5 முதல் 12 முட்டைகளிடும்.

படங்கள்

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

தாழைக் கோழி: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

தாழைக்கோழியானது ஆங்கிலத்தில் Common Moorhen என்றழைக்கப்படுகிறது இது ஒரு நீர்க்கோழி வகையயாகும் Rallidaeகுடும்பத்தை சார்ந்தது,இது உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்