ஓக்மரக் காளான் (shiitake) (/ʃɪˈtɑːkeɪ, ˌʃiːɪ-, -ki/;[1] சப்பான்: [ɕiꜜːtake] (கேட்க) இலென்டினுலா எடோடெசு (Lentinula edodes)) கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் உண்ணத்தக்க காளான் ஆகும். இது பல ஆசிய நாடுகளில் பயிரிட்டு உண்ணப்படுகிறது. இது மரபு மருத்துவத்தில் ஒரு மூலிகையாகும்.[2][3][4][5]
இந்தக் காளானை முதலில் அறிவியலாக அகாரிகசு எடோடெசு (Agaricus edodes) என 1877 இல் மைல்சு யோசப் பெர்க்கேலி விவரித்துள்ளார்.[6] மேலும் 1976 இல் டேவிடு பெகிளர் இதை இலென்டினுலா (Lentinula) பேரினத்தில் வகைப்படுத்தினார்.[7] இந்தப் பூஞ்சை தன் வகைபாட்டு வரலாற்றில் பல இணைபெயர்களைப் பெற்றுள்ளது:[8]
இந்தக் காளானின் யப்பானியப் பெயராகிய வார்ப்புரு:நிகோங்கோ (nihongo) என்பது வார்ப்புரு:நிகோங்கோ ஆகியவற்றில் உருவானதாகும். ஏனெனில், காசுட்டனாப்சிசு அக்சுபிடாட்டா மரம் தான் இந்தக் காளான் வளர உலர்கட்டைகளை வழங்குகிறது. எனவே வார்ப்புரு:நிகோங்கோ என வழங்குகிறது.[9] தாவரவியல் பெயரின் "எடோடெசு" எனும் இலத்தீன அடைமொழியின் பொருள் "உண்ணத்தகும்" என்பதாகும்.[10] இது மேலும் பொதுவாக "அரம்ப ஓக் காளான்" எனவும் " கருங்காட்டுக் காளான்" எனவும் "கருப்புக் காளான்" எனவும் "[[பொன்னிற ஓக் காளான்" அல்லது "ஓக்மரக் காளான்" எனவும் வழங்கப்படுகிறது.[11]
ஓக்மரக் காளான் இலையுதிர் மரங்களின் அழுகும் மரக்கட்டைகளில் வளர்கிறது. குறிப்பாக சீ, வாதுமை, ஓக், maple, பீச், sweetgum, poplar, hornbeam, செங்காலி, மல்பெரி, சின்குவாபின் ஆகிய மரங்களின் கட்டைகளில் வளர்கிறது. இது தென்கிழக்கு ஆசியாவின் வெதுவெதுப்பும் ஈரப்பதனும் அமைந்த காலநிலைப் பகுதிகளில் பரவியுள்ளது.[9]
பச்சையான, உலர்ந்த ஓக்மரக் காளான் கிழக்காசிய உணவுகளில் பலவகைகளில் பயன்ப்டுகின்றன. யப்பானில், இவை நறுஞ்சுவைச் சாற்றிலும், தாழ்சிகளில் மரக்கறிவகை அடித்தளமாகவும் அவித்த, வேகவைத்த உணவுகளில் உட்கூறுகளாகவும் பயன்படுகின்றன. சீன உணவுகளில், புத்தரின் மகிழ்ச்சி போன்ற மரக்கறி பக்குவங்களில் கலவையாகவும் சேர்க்கப்படுகின்றன.
ஒருவகை உயர்தர ஓக்மரக் காளான் உணவு யப்பானிய மொழியில் வார்ப்புரு:நிகோங்கோ எனவும்[12] தோங்கூ எனவும் வழங்குகிறது. சீன மொழியில் மாரி காலக் காளான் எனப்பொருள்படும் உயர்தர ஓக்மரக் காளான் உணவு குவாகூ (花菇) எனப்படுகிறது. சீன மொழியில், இது காளானின் மேலமையும் பூவடிவ இதழ்விரிவுப் பாணியை வைத்து பூக்காளான் என்ற பொருளில் வழங்குகிறது. இவை இரண்டுமே குறைந்த வெப்பநிலைகளில்
பகுதி சமைத்த ஓக்மரக் காளானை உண்ணுவதால் ஓக்மரக் காளான் தோலழற்சி எனும் ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுகிறது. மேலும் தோல் தடிப்புகள் முகம் உட்பட, உடலில் எங்கும் உண்ட 24 மணி நேரத்தில் ஏற்படுகின்றன. வெயிலில் சென்றால் இவை மேலும் கூடுகின்றன. இதணிய3 முதல் 21 நாட்கள் ஆகின்றன (erythematous, micro-papular, streaky pruriginous rash) .[13] இந்தவிளைவு இதில் உள்ள இலென்டினன் எனும் பாலிசாக்கரைடுகளால் ஏற்படுகிறது[13] இந்த விளைவு ஆசியாவில் பரவலாக நிலவுகிறது[14] இந்த விளைவு, ஐரோப்பாவிலும் ஓக்மரக் காளான் நுகர்வால், கூடிவருகிறது.[13] முழுமையான சமைப்பு ஒவ்வாமை தோன்றுவதை நீக்குகிறது.[15]
ஓக்மரக் காளானில் இருந்து இயற்கை உரமும் கலப்புரமும் உருவாக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன.[16][17]
கொரியப் பையோகோ-போக்கியூம் (கிளறி வறுத்த ஓக்மரக் காளான்)
யப்பானிய எக்கிபென் வார்ப்புரு:நிகோங்கோ
ஓக்மரக் காளான் வளர்ச்சி - காணொலி
ஓக்மரக் காளான் (shiitake) (/ʃɪˈtɑːkeɪ, ˌʃiːɪ-, -ki/; சப்பான்: [ɕiꜜːtake] (கேட்க) இலென்டினுலா எடோடெசு (Lentinula edodes)) கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் உண்ணத்தக்க காளான் ஆகும். இது பல ஆசிய நாடுகளில் பயிரிட்டு உண்ணப்படுகிறது. இது மரபு மருத்துவத்தில் ஒரு மூலிகையாகும்.