ஆமைப் புறா ("turtle dove" அல்லது "mourning dove" (புலம்பும் புறா); Zenaida macroura) என்பது வடஅமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் புறா வகையாகும். இதற்குப் புலம்பும் புறா, கரோலினா புறா, மழை புறா எனப் பல பெயர்கள் உண்டு.[2] வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பறவை இதுவாகும். பொழுதுபோக்குக்காகவும் இறைச்சிக்காகவும் அதிகமாக வேட்டையாடப்படும் பறவையும் இதுவே. மித வெப்பமான பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு குஞ்சுகளை ஈனும் திறனுடையது இது. மணிக்கு 88 கி.மீ வேகத்தில் பறக்கும் திறனுடைய பறவை இதுவாகும்.[3]
இப்பறவை வெளிர் சாம்பலாகவும் பழுப்பாகவும் இருக்கும். ஆண் பெண் பறவைகள் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். இவை விதைகளை உண்ணும் பறவையாகும், குஞ்சுகளுக்குப் பெற்றோர்ப் புறாக்கள் பயிர்ப் பாலை உணவாகக் கொடுக்கின்றன.
இப்பறவைகள் ஊஉ ஊஉ என்று துக்கம் அனுசரிப்பது போல் சத்தமிடுவதால் புலம்பும் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. பழங்கால ரோமப் புலவர் வெர்சில் கூறிய சிறு செய்யுளை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இவை காது புறாவுடனும் (Zenaida auriculata) சொகோரோ தீவு சொகோரோ புறாவுடனும் (Zenaida graysoni) நெருங்கியவை. இவை மூன்றும் Zenaida பேரினத்தை சார்ந்தவை என குறிக்கப்பட்டுள்ளன.[4]
ஆமை புறாவில் ஐந்து கிளையினங்கள் உள்ளன.
இவற்றில் மூன்று துறையினங்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் கலந்து காணப்படுகின்றன.[5] மேற்கிந்திய துணையினம் கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவுகளில் காணப்படுகிறது[6]. இவை புளோரிடா கீ-க்கு அண்மையில் குடிபுகுந்துள்ளன.[5] கிழக்கு துணையினம் வடஅமெரிக்காவின் கிழக்குப் பகுதியிலும் பகாமாசு, பெர்முடா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேற்குத் துணையினம் வடஅமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் மெக்சிக்கோவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. பனாமா துணையினம் நடு அமெரிக்காவில் காணப்படுகிறது. கிளாரியன் தீவு துணையினம் கிளாரியன் தீவு பகுதியில் மட்டும் காணப்படுகிறது.[6]
பிரெஞ்சு உயிரியல் பறவையியல் அறிஞரான சார்லசு பனபர்டே தம் மனைவி இளவரசி சினைடேவை (Zénaïde) சிறப்பிக்கும் பொருட்டு 1838இல் இந்த அறிவியல் பெயரை சூட்டினார்.[7] இதே போன்ற பெயருடைய புறா (கழுத்துப்பட்டை புலம்பும் புறா) ஆப்பிரிக்காவிலும் காணப்படுவதால் [4] இது அமெரிக்க புலம்பும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க புறாவின் கழுத்தில் பட்டை போன்ற கறுப்பு நிறம் இருப்பதை கொண்டு எளிதாக வேறுபடுத்தலாம்.
ஆமைப் புறா 11,000,000 சதுர கிமீ (4,200,000 சதுர மைல்) பரப்பில் வசிக்கிறது[8]. இவை கரீபியன் கடலின் தீவுக்கூட்டமான பெரும் ஆன்டில்லெசு, ஐக்கிய அமெரிக்கா, தெற்கு கனடா, மெக்சிக்கோவின் பெரும் பகுதிகளில் வசிக்கிறது. கனடாவில் கோடை காலத்திலும் தென் நடு அமெரிக்க பகுதியில் குளிர்காலத்திலும் இப்பறவைகளை காணலாம்.[9] வட கனடாவிலும் அலாசுக்காவிலும் சில முறை இப்பறவைகளை காணமுடியும்[10] மற்றும் தென் அமெரிக்கா .[4]. பிரித்தானிய தீவுக்கூட்டம், ஐசுலாந்து, போர்த்துக்கலின் அசோர்சு தீவுக்கூட்டத்திலும் ஏழு முறை காணப்பட்டுள்ளது[5] . 1963ல் அவாய் தீவில் இப்பறவையினம் அறிமுகப்படுத்தப்பட்டது 1998ல் அங்கு சிறிய கூட்டம் இருந்தது.[11] சொகோரோ புறா 1972இல் சொகோரோ தீவுகளில் அழிந்தது சில மட்டுமே காட்சிசாலைகளில் உள்ளன. 1988இல் ஆமைப் புறா இத்தீவுகளில் காணப்பட்டது.[12]
இப்புறா அளவில் நடுத்தர அளவு உள்ளது. இது 31 செமீ நீளமும் 112 கிராமிலிருந்து 170 வரையான கிராம் எடையும் உடையது[13]. இதன் தலை வட்ட வடிவமானது. இதன் வால் நீளமானதுமாகவும் சாய்வானதுமாகவும் இருக்கும்.[14]). இதன் அலகு சிறியதாகவும் கருமையாகவும் இருக்கும். இதன் கால்கள் சிறியதாகவும் செந்நிறத்திலும் இருக்கும்.[5]
ஆமைப் புறா ("turtle dove" அல்லது "mourning dove" (புலம்பும் புறா); Zenaida macroura) என்பது வடஅமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் புறா வகையாகும். இதற்குப் புலம்பும் புறா, கரோலினா புறா, மழை புறா எனப் பல பெயர்கள் உண்டு. வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பறவை இதுவாகும். பொழுதுபோக்குக்காகவும் இறைச்சிக்காகவும் அதிகமாக வேட்டையாடப்படும் பறவையும் இதுவே. மித வெப்பமான பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு குஞ்சுகளை ஈனும் திறனுடையது இது. மணிக்கு 88 கி.மீ வேகத்தில் பறக்கும் திறனுடைய பறவை இதுவாகும்.
இப்பறவை வெளிர் சாம்பலாகவும் பழுப்பாகவும் இருக்கும். ஆண் பெண் பறவைகள் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். இவை விதைகளை உண்ணும் பறவையாகும், குஞ்சுகளுக்குப் பெற்றோர்ப் புறாக்கள் பயிர்ப் பாலை உணவாகக் கொடுக்கின்றன.
இப்பறவைகள் ஊஉ ஊஉ என்று துக்கம் அனுசரிப்பது போல் சத்தமிடுவதால் புலம்பும் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. பழங்கால ரோமப் புலவர் வெர்சில் கூறிய சிறு செய்யுளை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.