வேளா மீன் (Sawfish) அல்லது தச்சன் சுறா (Carpenter shark) என்பது ஒரு திருக்கை குடும்ப மீனாகும். இவற்றிற்கு நீண்ட தட்டையான கொம்பு அல்லது முக்கு உள்ளது. கொம்பின் இரு ஒரங்களிலில் ரம்பப் பற்கள் போன்ற கூரான பற்கள் உள்ளன. இந்த மீன்களில் பல இனங்கள் உள்ளன. இந்த மீன்கள் 7 m (23 ft) நீளம்வரை வளரக்கூடியன.[2][3][4] இக்குடும்ப மீன்கள்பற்றி பெரியதாக அறியப்படாமல் உள்ளது காரணம் இவைபற்றி சிறிய அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் பண்டைய கிரேக்க மொழியில்: πρίστης prístēs "saw, sawyer".[5] இருந்து பெறப்பட்டது.
இந்த வாள் சுறாக்களின் தனித்துவமான அமைப்பு தன் நீண்ட வாள் கொம்பு அமைப்புதான். இவை இந்தக் கொம்பு, கடலடி சகதியைக் கிளறி அங்கு மறைந்திருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாட உதவுகிறது. மேலும் மீன் கூட்டங்களில் புகுந்து தன் வாள் கொம்பால் மீன்களைத் தாக்கிக் காயமாக்கி தத்தளிக்கும் மீனை பிடித்து உண்ணும்.
வேளா மீன் (Sawfish) அல்லது தச்சன் சுறா (Carpenter shark) என்பது ஒரு திருக்கை குடும்ப மீனாகும். இவற்றிற்கு நீண்ட தட்டையான கொம்பு அல்லது முக்கு உள்ளது. கொம்பின் இரு ஒரங்களிலில் ரம்பப் பற்கள் போன்ற கூரான பற்கள் உள்ளன. இந்த மீன்களில் பல இனங்கள் உள்ளன. இந்த மீன்கள் 7 m (23 ft) நீளம்வரை வளரக்கூடியன. இக்குடும்ப மீன்கள்பற்றி பெரியதாக அறியப்படாமல் உள்ளது காரணம் இவைபற்றி சிறிய அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் பண்டைய கிரேக்க மொழியில்: πρίστης prístēs "saw, sawyer". இருந்து பெறப்பட்டது.