பலகாலிகள் என்பன கணுக்காலிகள் என்னும் தொகுதியின் ஒரு துணைத்தொகுதி. இதில் ஆயிரங்காலிகள் எனப்படும் மரவட்டைகளும், நூறுகாலிகள் எனப்படும் பூரான் வகைகளும் அடங்கும். இத்துணைத் தொகுப்பில் 13,000 வகையான இனங்கள் உள்ளன. இவை யாவும் நிலத்தில் வாழ்வன;[2]. ஆங்கிலத்தில் இத்துணைதொகுதியின் பெயர் மிரியாப்பாடு(Myriapoda). மிரியாடு (myriad) என்றால் பத்தாயிரம் (10,000) என்று பொருள். பாடு (pod) என்றால் கால், ஆனால் எந்த பலகாலிகள் (மிரியாபாடுகளின்) கால்களின் எண்ணிக்கையும் ஆயிரங்கால்களைத் தாண்டுவதில்லை. பொதுவாக இவற்றிற்கு ஏறத்தாழ 750 ஐத் தாண்டுவதில் இருந்து ஏறத்தாழ 10 கால்களுக்கும் குறைவாகக் கூட இருக்கும். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் இல்லாக்மெ பிளெனைப்ஸ் என்னும் மரவட்டையினத்துக்கு பொதுவாக 600 கால்களுக்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் 750 கால்களை உடைய ஒன்றைப் பற்றி குறிப்புகள் உள்ளன [3] பலகாலிகளுக்கு எளிய அமைப்புக் கண்களும் இரட்டை உணர்விழைகளும் உண்டு.
பலகாலிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை காடுகளில் விழுந்து அழுகும் தாவரங்களை பயனுடையவாறு உயிர்வேதியியல் முறையில் பிரிக்க உதவுகின்றன. [2], ஆனால் சில வகைகள் புல்வெளிகளிலும், வறண்ட நிலங்களிலும், இன்னும் சில பாலைவனங்களிலும் காணப்படுகின்றன [4]. பெரும்பாலன பலகாலிகள் இலைதழை உண்ணிகள், ஆனால் பூரான்கள் மட்டும் இரவில் இரைதேடுவன.
பலகாலிகள் என்பன கணுக்காலிகள் என்னும் தொகுதியின் ஒரு துணைத்தொகுதி. இதில் ஆயிரங்காலிகள் எனப்படும் மரவட்டைகளும், நூறுகாலிகள் எனப்படும் பூரான் வகைகளும் அடங்கும். இத்துணைத் தொகுப்பில் 13,000 வகையான இனங்கள் உள்ளன. இவை யாவும் நிலத்தில் வாழ்வன;. ஆங்கிலத்தில் இத்துணைதொகுதியின் பெயர் மிரியாப்பாடு(Myriapoda). மிரியாடு (myriad) என்றால் பத்தாயிரம் (10,000) என்று பொருள். பாடு (pod) என்றால் கால், ஆனால் எந்த பலகாலிகள் (மிரியாபாடுகளின்) கால்களின் எண்ணிக்கையும் ஆயிரங்கால்களைத் தாண்டுவதில்லை. பொதுவாக இவற்றிற்கு ஏறத்தாழ 750 ஐத் தாண்டுவதில் இருந்து ஏறத்தாழ 10 கால்களுக்கும் குறைவாகக் கூட இருக்கும். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் இல்லாக்மெ பிளெனைப்ஸ் என்னும் மரவட்டையினத்துக்கு பொதுவாக 600 கால்களுக்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் 750 கால்களை உடைய ஒன்றைப் பற்றி குறிப்புகள் உள்ளன பலகாலிகளுக்கு எளிய அமைப்புக் கண்களும் இரட்டை உணர்விழைகளும் உண்டு.
பலகாலிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை காடுகளில் விழுந்து அழுகும் தாவரங்களை பயனுடையவாறு உயிர்வேதியியல் முறையில் பிரிக்க உதவுகின்றன. , ஆனால் சில வகைகள் புல்வெளிகளிலும், வறண்ட நிலங்களிலும், இன்னும் சில பாலைவனங்களிலும் காணப்படுகின்றன . பெரும்பாலன பலகாலிகள் இலைதழை உண்ணிகள், ஆனால் பூரான்கள் மட்டும் இரவில் இரைதேடுவன.