dcsimg

காஃபி குடும்பம் (தாவரவியல்) ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
'ரூபர்' (ruber), என்றால் சிவப்பு Rubiaceae - Ixora coccinea

காஃபி குடும்பம் (தாவரவியல்) என்பது (இலத்தீன்:Rubiaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 611 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 13,100 இனங்களும் உள்ளன. [1] பூக்கும் தாவரங்களில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது நான்காவது பெரிய குடும்பமாகும். பேரின எண்ணிக்கையினை வைத்துப் பார்க்கும் போது, ஐந்தாவது இடத்தினைப் பெறுகிறது. இலத்தீனிய சொல்லான 'ரூபர்' ( ruber), என்பதற்கு சிவப்பு என்று பொருள். அச்சொல்லும், ஒரு பூண்டு வகை செடியின்(madder) பெயரும்[2] இணைந்து, இப்பெயர் தோன்றியது என்பர்.[3] 1789 ஆம் ஆண்டில், முதன் முதலாக, ஆன்டனி (Antoine Laurent de Jussieu) என்பவர், இக்குடும்பத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். அன்டார்டிகாக் கண்டத்தைத் தவிர, உலகின் பிற கண்டங்களில், இத்தாவரங்கள் காணப்படுகிறது. இக்குடும்பத்தில், உயிரியற் பல்வகைமை நிறைந்து காணப்படுகிறது. [4] இக்குடும்பத் தாவரங்களுள் 76 பேரினங்களும், 274-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Stevens, P. F. (2001 onwards). Angiosperm Phylogeny Website. Version 9, June 2008. http://www.mobot.org/MOBOT/research/APweb/
  2. Plant Systematics by Michael G. Simpson
  3. Wiktionary. "Ruber". Searched November, 2011. http://en.wiktionary.org/wiki/ruber
  4. Davis, Aaron P.; Rafaël Govaerts, Diane M. Bridson, Markus Ruhsam, Justin Moat, Neil A. Brummitt (2009). "A global assessment of distribution, diversity, endemism, and taxonomic effort in the Rubiaceae". Annals of the Missouri Botanical Garden 96 (1): 68–78. doi:10.3417/2006205.

புற இணைய இணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

காஃபி குடும்பம் (தாவரவியல்): Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= 'ரூபர்' (ruber), என்றால் சிவப்பு Rubiaceae - Ixora coccinea

காஃபி குடும்பம் (தாவரவியல்) என்பது (இலத்தீன்:Rubiaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 611 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 13,100 இனங்களும் உள்ளன. பூக்கும் தாவரங்களில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது நான்காவது பெரிய குடும்பமாகும். பேரின எண்ணிக்கையினை வைத்துப் பார்க்கும் போது, ஐந்தாவது இடத்தினைப் பெறுகிறது. இலத்தீனிய சொல்லான 'ரூபர்' ( ruber), என்பதற்கு சிவப்பு என்று பொருள். அச்சொல்லும், ஒரு பூண்டு வகை செடியின்(madder) பெயரும் இணைந்து, இப்பெயர் தோன்றியது என்பர். 1789 ஆம் ஆண்டில், முதன் முதலாக, ஆன்டனி (Antoine Laurent de Jussieu) என்பவர், இக்குடும்பத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். அன்டார்டிகாக் கண்டத்தைத் தவிர, உலகின் பிற கண்டங்களில், இத்தாவரங்கள் காணப்படுகிறது. இக்குடும்பத்தில், உயிரியற் பல்வகைமை நிறைந்து காணப்படுகிறது. இக்குடும்பத் தாவரங்களுள் 76 பேரினங்களும், 274-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்