dcsimg

வயிற்றுக்காலி ( tamoul )

fourni par wikipedia emerging languages

வயிற்றுக்காலி (Gastropoda) என்பது, பொதுவாக நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஆகியவற்றை அடக்கிய தொகுதி (உயிரியல்) மெல்லுடலி யில் அடங்கும் ஒரு பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் இணைந்த கால் கொண்டு நகர்வதால் வயிற்றுக்காலி என்று அழைக்கப்படுகின்றன.

குடற்காலிகள் வகுப்பு பூச்சிகளுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு தொல்லுயிர் எச்சம் அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 குடும்பங்கள் காணப்பட்டதாகவும், அதில் 202 இனஅழிவு க்கு உட்பட்டதாகவும் தொல்லுயிர் எச்சப் பதிவுகள் காட்டுகின்றன.[2]

குடற்காலிகள் மெல்லுடலிகள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இதில் 60,000 முதல் 80,000 [2][3] வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை இனம் (உயிரியல்)கள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்கூற்றியல், நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு கிளைப்பாட்டியலில் இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.

மேற்கோள்கள்

  1. எஆசு:<0287:LECSSF>2.0.CO;2 10.1666/0022-3360(2002)076<0287:LECSSF>2.0.CO;2
  2. 2.0 2.1 Bouchet P. & Rocroi J.-P. (Ed.); Frýda J., Hausdorf B., Ponder W., Valdes A. & Warén A. 2005. Classification and nomenclator of gastropod families. Malacologia: International Journal of Malacology, 47(1-2). ConchBooks: Hackenheim, Germany. ISBN 3-925919-72-4. 397 pp. vliz.be
  3. Britannica online: abundance of the Gastropoda
licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வயிற்றுக்காலி: Brief Summary ( tamoul )

fourni par wikipedia emerging languages

வயிற்றுக்காலி (Gastropoda) என்பது, பொதுவாக நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஆகியவற்றை அடக்கிய தொகுதி (உயிரியல்) மெல்லுடலி யில் அடங்கும் ஒரு பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் இணைந்த கால் கொண்டு நகர்வதால் வயிற்றுக்காலி என்று அழைக்கப்படுகின்றன.

குடற்காலிகள் வகுப்பு பூச்சிகளுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு தொல்லுயிர் எச்சம் அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 குடும்பங்கள் காணப்பட்டதாகவும், அதில் 202 இனஅழிவு க்கு உட்பட்டதாகவும் தொல்லுயிர் எச்சப் பதிவுகள் காட்டுகின்றன.

குடற்காலிகள் மெல்லுடலிகள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய வகுப்பு (உயிரியல்) ஆகும். இதில் 60,000 முதல் 80,000 வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை இனம் (உயிரியல்)கள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்கூற்றியல், நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு கிளைப்பாட்டியலில் இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.

licence
cc-by-sa-3.0
droit d’auteur
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்