ஹெரான்கள் என்பவை ஒரு வகைக் கொக்குகள் ஆகும். இவை நீளமான கால்களுடையவை ஆகும். இவை நன்னீர் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சிறிய நாரைகளைவிடப் (egret) பெரியவை. இவற்றிற்கு நீண்ட அலகுகள் உள்ளன.
ஹெரான்கள் என்பவை நாரைகள், அரிவாள் மூக்கன்கள் மற்றும் துடுப்புவாயன்கள் குடும்பங்களில் உள்ள பறவைகளைப் போன்றே இருந்தாலும், இவை பறக்கும்போது கழுத்தை உள்ளிளுத்தவாறு பறக்கின்றன, முன்னால் கூறிய வகைகளைப்போல் கழுத்தை நீட்டியவாறு அல்ல. இவற்றின் இறகுகளில் இருந்து தூசி பறக்கிறது.
இவை நீண்ட கால்கள், கழுத்துகள் கொண்ட நடுத்தர-பெரிய அளவுள்ள பறவைகள் ஆகும். இவற்றில் ஆண் பெண் வேறுபாடு (பால் ஈருருமை ) அறிவது கடினம் ஆகும். இக்குடும்பத்தில் சிறிய குருகு தான் மிகச் சிறியது ஆகும். அது வழக்கமாக 30 செமீ (12 அங்குலம்) நீளத்தைக் கொண்டிருக்கும். ஹெரான்களில் மிகப்பெரிய இனம் கோலியத் ஹெரான் ஆகும். இது 152 செமீ (60 அங்குலம்) உயரம் உள்ளது. இவற்றின் கழுத்து S- வடிவத்தில் இருக்கும். பகலாடி ஹெரான்களின் கழுத்து இரவாடி ஹெரான்கள் மற்றும் குருகுகளைவிட நீளமாக இருக்கும். இவற்றின் கால்கள் முடியற்றுக் காணப்படுகின்றன (விதிவிலக்கு ஜிக்சாக் ஹெரான்). இவை பறக்கும்போது கால்களும் பாதமும் பின்னோக்கி நீட்டப்பட்டு இருக்கும்.[1]