வெப்ப மண்டலப் பறவைகள் (ஆங்கிலப் பெயர்: Tropicbirds) என்பவை பைதோன்டிடே (Phaethontidae) குடும்பத்தில் உள்ள வெப்ப மண்டலப் பறவைகள் ஆகும். இவை கடல் பறவைகள் ஆகும். பைதோன்டிபார்மசு ( Phaethontiformes) வரிசையில் இப்பறவையினம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக இவை பெலிகனிபார்மசு (Pelecaniformes) வரிசையைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டது, ஆனால் மரபியல் ஆய்வுகள் இவை யூரிபிகிபார்மசு (Eurypygiformes) வரிசையுடன் தொடர்புடையவை என்று கூறுகின்றன. வெப்ப மண்டலப் பறவைகள் 3 இனங்கள் ஆகும். இவை பைதோன் (Phaethon) பேரினத்தின் கீழ் வருகின்றன. பைதோன் என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு "சூரியன்" என்று பொருள்.[1] இவை பொதுவாக வெண்மையான இறகுகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் வால் இறகுகள் நீளமாக இருக்கும். இவற்றின் கால் மற்றும் பாதம் சிறியதாக இருக்கும்.
இவை 76-102 செ.மீ. நீளம், 94-112 செ.மீ. இறக்க நீளம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கால்கள் உடலின் கடைசிப் பகுதியில் இருக்கின்றன. ஆதலால் இவற்றால் நடக்க இயலாது. இவை கால்களால் உந்தி நகர்கின்றன.[2]
வெப்ப மண்டலப் பறவைகள் (ஆங்கிலப் பெயர்: Tropicbirds) என்பவை பைதோன்டிடே (Phaethontidae) குடும்பத்தில் உள்ள வெப்ப மண்டலப் பறவைகள் ஆகும். இவை கடல் பறவைகள் ஆகும். பைதோன்டிபார்மசு ( Phaethontiformes) வரிசையில் இப்பறவையினம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக இவை பெலிகனிபார்மசு (Pelecaniformes) வரிசையைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டது, ஆனால் மரபியல் ஆய்வுகள் இவை யூரிபிகிபார்மசு (Eurypygiformes) வரிசையுடன் தொடர்புடையவை என்று கூறுகின்றன. வெப்ப மண்டலப் பறவைகள் 3 இனங்கள் ஆகும். இவை பைதோன் (Phaethon) பேரினத்தின் கீழ் வருகின்றன. பைதோன் என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு "சூரியன்" என்று பொருள். இவை பொதுவாக வெண்மையான இறகுகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் வால் இறகுகள் நீளமாக இருக்கும். இவற்றின் கால் மற்றும் பாதம் சிறியதாக இருக்கும்.