dcsimg

காஸ்பியன் ஆலா ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

காஸ்பியன் ஆலா (Caspian Tern -- Sterna caspia) என்பது ஆலாக்களிலேயே மிகப்பெரியது. பவழச் சிவப்பு நிற அலகு இப்பறவையை எளிதில் இனங்காண உதவும் குறிப்பாகும்.

உடல் தோற்றம்

இதன் நீளம் சராசரியாக 47-54 செமீ; விரித்த இறக்கையின் நீளம் 127-145 செமீ. இது கடற்காகத்தைப் போன்ற தோற்றமுடையது.

வளர்ந்த இனப்பெருக்க காலப் பறவை

கரிய தலைக்கவசம், வெண்மையான உடல் மற்றும் கரிய நிற கால்கள் கொண்டது; சிவப்பு கலந்த செம்மஞ்சள் நிற அலகின் நுனியில் கரும்புள்ளி காணப்படும். இறக்கையின் மேல் பகுதியும் பின்பகுதியும் சாம்பல் நிறம். குளிர்காலத்திலும் கூட இதன் கரிய தலைக்கவசம் காணப்படும் - ஆனால் முன் தலையில் வெண்ணிற கீற்றுகளுடன் காணப்படும்.

பரவலும் வாழ்விடமும்

காஸ்பியன் ஆலாக்களின் இனப்பெருக்க வாழிடங்கள், பெரிய ஏரிகள் மற்றும் கடற்கரைகள். வட அமேரிக்கா, ஐரோப்பா (குறிப்பாக, பால்டிக் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகள்), ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக இவை கூடு கட்டும் இடத்தை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு, காஸ்பியன் ஆலாக்களின் அலாஸ்கா சிற்றினத்தில் காணப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. BirdLife International (2015). "Hydroprogne caspia". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2015: e.T22694524A84639220. doi:10.2305/IUCN.UK.2015.RLTS.T22694524A84639220.en. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2015.RLTS.T22694524A84639220.en. பார்த்த நாள்: 25 May 2016.
  2. Handbook of the Birds of the World. 3. Barcelona: Lynx Edicions. 1996. பக். 645. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-20-2.
lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

காஸ்பியன் ஆலா: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

காஸ்பியன் ஆலா (Caspian Tern -- Sterna caspia) என்பது ஆலாக்களிலேயே மிகப்பெரியது. பவழச் சிவப்பு நிற அலகு இப்பறவையை எளிதில் இனங்காண உதவும் குறிப்பாகும்.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்