தட்டை வாயன்[2] எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller - Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.
ஆண்டி வாத்துகள் தனியாகவோ இணையுடனோ சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன; ஆகவே, பரவலாக இவை காணப்பட்டாலும் பிற வாத்துகளைப் போல் அதிக எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக இவற்றைக் காண இயலுவதில்லை. சேற்றுநீரை சலிப்பதற்கு ஏதுவாக இதன் அலகு உள்ளதால் (அலகின் உட்புறம் இருக்கும் சீப்பு போன்ற அமைப்புகள் - பற்கள் அன்று - சலித்தலை செய்கின்றன) சேற்றுநீரில் காணப்படும் நுண்ணிய வெளி ஓடுடைய கிளாடோசெரன்களையும் சிரோனிமிட் என்றொரு வகை நுண்புழுக்களையும் சலித்து உண்கின்றன[3].
தட்டை வாயன் எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து (Northern Shoveller - Anas clypeata) ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் வலசை போகின்றது.