dcsimg
Nome não resolvido

Bryophytes

பிரயோபைற்று ( Tâmil )

fornecido por wikipedia emerging languages
 src=
மாக்கந்தியா-ஒரு ஈரலுருத் தாவரம்

பிரயோபைட்டா (bryophyte) தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால்(Non-vascular plant)[1] சூழப்பட்டும் இருக்கும். பிரயோபைற்றுக்கள் பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் வித்திகள் (Spores) எனப்படும்.

எ.கா: மாக்கந்தியா, Riccia, Pogonatum

பிரயோபைட்டா மூன்று வகைப்படும். அவை ஈரலுருத் தாவரம், கொம்புருத் தாவரம், பாசித் தாவரம் என்பனவாகும்.

வகைப்படுத்தல்

 src=
மொஸ்-பாசித் தாவரங்கள்.
 src=
கொம்புருத் தாவரங்கள்.

கலனிழையத்தைக் கொண்டிராத நிலத்தாவரங்கள் அனைத்தும் பிரியோபைற்றுக்களென பாகுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் இப்பாகுபாடு ஓரளவுக்கு செயற்கையானதாகும். இப்பாகுபாட்டுக்குள் மூன்று கணங்கள் உள்ளன. ஈரலுருத் தாவரங்கள் ( Marchantiophyta), கொம்புருத் தாவரங்கள் (Anthocerotophyta) மற்றும் பாசி (Bryophyta) என்பனவாகும்.

எம்பிரியோபைற்றுக்கள்

ஈரலுருத் தாவரங்கள்




பாசித் தாவரங்கள்




கொம்புருத் தாவரங்கள்



கலனிழையத் தாவரங்கள்





பிரயோபைற்றுக்கள்

பிரையோபைற்றுக்களின் வகைப்பாட்டில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. சில ஆராய்ச்சி முடிவுகள் மேற்படி வகைப்பாடை ஆதரித்தாலும், சில இதற்கு முரண்பாடான முடிவுகளைத் தருகின்றன. பாசித்தாவரங்களான மொஸ்களில் வேறு வகையான கடத்தும் இழையங்கள் விருத்தியடைந்திருந்தாலும், அவற்றின் கட்டமைப்பு வேறுபட்டிருப்பதாலும், அக்கலனிழையத்தில் லிக்னின் காணப்படாடதாலும், அவை கலனிழையத்தாவரங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதில்லை.

இன அழிவுக்கு உட்பட்ட சில இனங்களையும் வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மேற்படி வகைப்பாடு மேலும் சிக்கலான வடிவை அடையும். இவ்வகைப்பாட்டின் படி ஈரலுருத் தாவரங்களே மிகப் பழைமையான நிலத்தாவரங்களாகும். இவ்வகைப்பாட்டில் கோர்னியோடைட்டுக்கள் எனப்படும் அழிவடைந்த இனம் கொம்புருத்தாவரங்களுக்கும் கலனிழையத் தாவரங்களுக்கும் இடையே உள்ளன. பிரையோபைற்றுக்களைப் போல கோர்னியோபைட்டுக்களிலும் உண்மையான கலனிழையம் இல்லாவிட்டாலும், சில பண்புகளால் அவை கலனிழையத் தாவரங்களைப் போலுள்ளன.

நிலத் தாவரங்கள்


ஈரலுருத் தாவரங்கள்




மொஸ்கள்




கொம்புருத்தாவரம்



பொலிஸ்போரொன்கியோபைற்றுக்கள்


"புரோடிரக்கியோபைட்டு", உ-ம்: கோர்னியோபைற்று



கலனிழையத் தாவரங்கள்







பிரையோபைற்றுக்களின் வாழ்க்கை வட்டம்

ஏனைய நிலத்தாவரங்களைப் போலவே பிரையோபைற்றுக்களும் சந்ததிப் பரிவிருத்தியைக் காண்பிக்கின்றன. கலங்களில் அரைவாசி நிறமூர்த்தங்களைக் (ஹப்லொய்ட்) கொண்ட புணரித்தாவரத்திலிருந்து முழுமையான நிறமூர்த்தங்களைக் கொண்ட (டிப்லொய்ட்) வித்தித்தாவரம் உருவாவதே இச்சந்ததிப் பருவிருத்தியின் அடிப்படையாகும். புணரித்தாவரம் விந்துக்களையும், முட்டைக் கலங்களையும் உருவாக்கும். இவை ஒன்றிணைந்து வித்தித் தாவரத்தை உருவாக்குகின்றது. வித்தித்தாவரம் வளர்ச்சியடைந்து வித்திகளை உருவாக்கும். வித்திகள் பின்னர் புணரித்தாவரங்களாக மாறுகின்றன. பிரையோபைற்றுக்களில் புணரித்தாவரமே ஆட்சியுடையதாகும். இதுவே தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் பெரும் பகுதியை ஆக்கின்றது. பிரையோபைற்றுக்கள் இனம்பெருக நீர் அவசியமாகும். இதனாலேயே இவை ஈரலிப்பான பிரதேசங்களில் வளர்கின்றன (விதிவிலக்குகள் உண்டு).

ஒப்பீடு

புணரித்தாவரங்களின் ஒப்பீடு

வித்தித்தாவரத்தின் ஒப்பீடு

மேற்கோள்கள்

  1. "Reviews glossary". பார்த்த நாள் 2009-03-26.
licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

பிரயோபைற்று: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages
 src= மாக்கந்தியா-ஒரு ஈரலுருத் தாவரம்

பிரயோபைட்டா (bryophyte) தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால்(Non-vascular plant) சூழப்பட்டும் இருக்கும். பிரயோபைற்றுக்கள் பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் வித்திகள் (Spores) எனப்படும்.

எ.கா: மாக்கந்தியா, Riccia, Pogonatum

பிரயோபைட்டா மூன்று வகைப்படும். அவை ஈரலுருத் தாவரம், கொம்புருத் தாவரம், பாசித் தாவரம் என்பனவாகும்.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages