dcsimg

சுருட்டைவிரியன் ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

புல் விரியன்[1], என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்[2]நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.

பெயர்க்காரணம்

  • செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் இரம்பப்பற்களைப் போல இருப்பதாலும் இப்பாம்பிற்கு இரம்பச்செதில் விரியன் [அ] வாட்செதில் விரியன்- Saw-scaled viper என்ற பெயர் வந்தது.
  • இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
  • அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் கம்பள விரியன் என்றும் அழைக்கப்படுகிறது [3]

உடல் தோற்றம்

 src=
புல் விரியன்
  • தலை முக்கோண வடிவில் இருக்கும்; அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பிலுள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • தடிமனான, சிறிய உடலையுடையது.
  • கண் பெரியதாகவும் கண்மணி செங்குத்தாகவும் உள்ளது.
  • வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
 src=
E. carinatus பக்கவாட்டில் வளைந்து செல்லுதல்

இயல்பு

  • அளவில் சிறியதாக இருந்தாலும் (45 - 60 செ.மீ.), இதன் நஞ்சு அல்லது நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடன் தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களே காரணமாகின்றன.[4]
  • தொந்தரவு தரப்படும்போது, இது தன் உடலை இரு சுருள்களாக எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு அச்சுருள்களை ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உராய்விக்கும்; அப்போது உப்புக்காகிதத்தைத் தேய்த்தால் உண்டாகும் ஒலி போன்ற சலசலப்பு உரக்கக் கேட்கும்.[3]
  • பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது; காலை வெயிலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
  • காய்ந்த வெளி, மணல்/பாறைப் பாங்கான சமவெளி/மலை, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப்பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காண முடியும்.
  • பகலில் பாறைகளுக்கடியில், மரப்பட்டைகளுக்குப் பின்னால், முட்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
  • பக்கவாட்டில்-வளைந்து செல்லும் ( side-winding ) முறையில் வேகமாக இயங்கும்.
  • மரங்களில் நன்றாக ஏறும்.

உணவு

  • எலிகள், பல்லி/ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகள்.

மேலும் சில இயல்புகள்/குணங்கள்

  • ஆண் பாம்புகள் சண்டையிடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் 4 - 8 வரையில் குட்டிகளை ஈனும். ஈனும் காலம் - ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை.

புல்விரியன் -- படிமங்கள்

இதையும் பார்க்கவும்

பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)

மேற்கோள்கள்

  1. McDisarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
  2. ஆக்ஃசுபோர்டு அகராதி, வைப்பெரிடீ (viperidae) என்னும் சொல்லை 1909 இல் இருந்து ஆங்கிலத்தில் பயன்படுதுவதைக் குறிப்பிடுகின்றது
  3. 3.0 3.1 தமிழ் இணையப்பல்கலையின் கலைக்களஞ்சியம்
  4. Wilderness Survival

தகவலுதவி

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages

சுருட்டைவிரியன்: Brief Summary ( Tâmil )

fornecido por wikipedia emerging languages

புல் விரியன்[1], என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.

licença
cc-by-sa-3.0
direitos autorais
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
original
visite a fonte
site do parceiro
wikipedia emerging languages