நெட்டிலிங்கம் (Polyalthia longifolia) சில சமயங்களில் அசோக மரம் எனத் தவறாக அழைக்கப்படுகிறது. எனினும் அசோகு (saraca indica) என்னும் மரமே பழைய நூல்களில் அசோகம் என அழைக்கப்படுவதால், இம் மரம், போலி அசோகம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சுமார் 15 மீட்டர் (50 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. நீண்டு மெலிந்த கூம்பு வடிவில் வளரும் இது, கிளைகளைப் பரப்பி வளர்வதில்லை. மெலிந்து, கிடை மட்டத்துக்குக் கீழ்ச் சுமார் 45 பாகை அளவில் கீழ் நோக்கிய நிலையில் வளரும் இதன் கிளைகள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரையே வளர்கின்றன. ஒடுங்கி நீளமாகவும், இருபுறமும் பளபளப்பாகவும் இருக்கும் இதன் இலைகள் தடிப்பானவை, விளிம்புகளில் அலையலையாக நெளிந்து காணப்படும். இலையின் வடிவமும், இவை தொங்கிய நிலையில் காணப்படுவதும், இம்மரத்தின் மூல இடம் அதிக மழைவீழ்ச்சி கொண்ட இடமாக இருக்கக்கூடும் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. [1]
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது.
இதன் இனங்கள்
நெட்டிலிங்கம் (Polyalthia longifolia) சில சமயங்களில் அசோக மரம் எனத் தவறாக அழைக்கப்படுகிறது. எனினும் அசோகு (saraca indica) என்னும் மரமே பழைய நூல்களில் அசோகம் என அழைக்கப்படுவதால், இம் மரம், போலி அசோகம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சுமார் 15 மீட்டர் (50 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. நீண்டு மெலிந்த கூம்பு வடிவில் வளரும் இது, கிளைகளைப் பரப்பி வளர்வதில்லை. மெலிந்து, கிடை மட்டத்துக்குக் கீழ்ச் சுமார் 45 பாகை அளவில் கீழ் நோக்கிய நிலையில் வளரும் இதன் கிளைகள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரையே வளர்கின்றன. ஒடுங்கி நீளமாகவும், இருபுறமும் பளபளப்பாகவும் இருக்கும் இதன் இலைகள் தடிப்பானவை, விளிம்புகளில் அலையலையாக நெளிந்து காணப்படும். இலையின் வடிவமும், இவை தொங்கிய நிலையில் காணப்படுவதும், இம்மரத்தின் மூல இடம் அதிக மழைவீழ்ச்சி கொண்ட இடமாக இருக்கக்கூடும் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது.
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது.
வேறுபாடுஇதன் இனங்கள்
அசோக மரம் செயலை மரம்