ஊமத்தை (தாவர வகைப்பாடு : Datura stramonium; ஆங்கிலம் :jimson weed, Thorn Apple ) என்பது ஒரு தாவர இனம். இதன் பூவின் பெயர் ஊமத்தம் . இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[2]
கூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.