dcsimg

கருவிளை ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ.குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று.

இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர்.

சங்குப்பூ பல்வேறு வண்ணங்களில் பூக்கும். கருவிளை நீலநிறத்தில் மட்டும் பூக்கும் அதன் வேறு இனம்.

கருவிளை என்னும் இந்தப் பூ மணிப் பூங் கருவிளை என்று இந்தப் பூ விளக்கப்படுவதால் இந்தப் பூ மணிநிறம் கொண்டது எனத் தெரியவருகிறது. மணிநிறம் என்பது நீலநிறம். இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடி அணியாக்கிக் கொண்ட 99 பூக்களில் ஒன்று.[1]
மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும்.[2]
மயில்-பீலியின் கண் போல் இருக்கும்.[3]
கண்ணைப்போல் இருக்கும்.[4]
கண்ணைப் போல் மலரும்.[5][6]
வெண்ணிறப் பகன்றை மலரின் நிறத்தோடு மாறுபட்ட நிறம் கொண்டது.[7]

யாப்பிலக்கண வாய்பாடு
பாடலில் வரும் சீர் 'நிரைநிரை' அசை கொண்டு நிற்பதைக் 'கருவிளை' என்னும் வாய்பாடாகக் கொள்வர்.
 src=
கருவிளை மற்றொரு வகை மலர். கிலுகிலுப்பை மலர்

மேலும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. மணிப்பூங் கருவிளை - குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
  2. மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய - நற்றிணை 221/1,2
  3. பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி - குறுந்தொகை 110/4
  4. தண் புன கருவிளை கண் போல் மா மலர் - நற்றிணை 262/1
  5. கண் என கருவிளை மலர பொன் என - ஐங் 464/1
  6. நீர் வார் கண்ணின் கருவிளை மலர - அகம் 294/
  7. கருவிளை முரணிய தண் புதல் பகன்றை - அகம் 255/11
ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages

கருவிளை: Brief Summary ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ.குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று.

இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர்.

சங்குப்பூ பல்வேறு வண்ணங்களில் பூக்கும். கருவிளை நீலநிறத்தில் மட்டும் பூக்கும் அதன் வேறு இனம்.

கருவிளை என்னும் இந்தப் பூ மணிப் பூங் கருவிளை என்று இந்தப் பூ விளக்கப்படுவதால் இந்தப் பூ மணிநிறம் கொண்டது எனத் தெரியவருகிறது. மணிநிறம் என்பது நீலநிறம். இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடி அணியாக்கிக் கொண்ட 99 பூக்களில் ஒன்று.
மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும்.
மயில்-பீலியின் கண் போல் இருக்கும்.
கண்ணைப்போல் இருக்கும்.
கண்ணைப் போல் மலரும்.
வெண்ணிறப் பகன்றை மலரின் நிறத்தோடு மாறுபட்ட நிறம் கொண்டது.

யாப்பிலக்கண வாய்பாடு பாடலில் வரும் சீர் 'நிரைநிரை' அசை கொண்டு நிற்பதைக் 'கருவிளை' என்னும் வாய்பாடாகக் கொள்வர்.  src= கருவிளை மற்றொரு வகை மலர். கிலுகிலுப்பை மலர்
ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages