dcsimg

காட்டுச் சிலம்பன் ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

காட்டுச் சிலம்பன் அல்லது காட்டு பூணியல் (jungle babbler) அல்லது பூணில் என்பது ஒருவகைப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது.

விளக்கம்

இது மைனாவைவிட சற்று சிறியது. தவிட்டு நிறமும், வால் சற்று நீண்டும் இருக்கும். எப்போதும் ஏழெட்டு பறவைகளாக திரியும் இதனால் ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்று அழைப்பதும் உண்டு.

வாழ்வியல்

காடுகள் நகர்ப்புறங் களில்கூடத் தென்படும் இவை, எப்போதும் ஒலி எழுப்பிக்கொண்டவாறே இருக்கும். இரையை உண்ணும்போதுகூட, ஒலி எழுப்பிக்கொண்டே உண்ணும் இப்பறவைகள் பொதுவாக சிறு பூச்சிகள், தானியங்கள், தேன் மற்றும் சிறு பழங்களை உண்டு வாழ்கின்றன.[2]. பொதுவாக 16.5 வருடங்கள் வரை கூட உயிர் வாழ்கின்றன[3]. கொண்டைக் குயில், அக்கக்கா குருவி போன்ற பறவைகள் தங்களின் முட்டைகளை, காட்டுச் சிலம்பன் பறவைகளின் கூடுகளில் இட்டுச் சென்றுவிடும். குஞ்சு பொறித்த பின்னர், தன்னுடைய குஞ்சுகள் அல்ல என்பதை உணராமல், அவற்றுக்கும் சேர்த்து பெற்றோர் பறவைகள் இரை தேடி எடுத்து வரும். ஒவ்வொரு முறையும், இரை தேடி இவை சோர்ந்து போகும் என்பதால், இதர பறவைகள் இந்தக் குஞ்சுகளுக்கு இரை கொண்டுவந்து கொடுக்கும்.[4]

மேற்கோள்

  1. "Turdoides striata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Narang, ML & Lamba, BS (1986). "Food habits of jungle babbler Turdoides striatus (Dumont) and its role in the ecosystem". Indian Journal of Ecology 13 (1): 38–45.
  3. Flower SS (1938). "Further notes on the duration of life in animals. IV. Birds". Proc. Zool. Soc. London, Ser. A: 195–235.
  4. ராதிகா ராமசாமி (2018 நவம்பர் 17). "அந்த 7 சகோதரிகள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 திசம்பர் 2018.
ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages

காட்டுச் சிலம்பன்: Brief Summary ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

காட்டுச் சிலம்பன் அல்லது காட்டு பூணியல் (jungle babbler) அல்லது பூணில் என்பது ஒருவகைப் பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது.

ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages