சூரை (Tuna) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த உவர்நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இதில் 5 பேரினங்களாக மொத்தம் 15 இனங்கள் உள்ளன. இது வேகமாக நீந்தக்கூடிய மீன்களில் ஒன்றாகும். சான்றாக மஞ்சள் துடுப்புச் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய திறன் கொண்டது.[2]
வெப்பக் கடல்களில் காணப்படும் இவ்வகை மீன்கள் வணிகத்திற்காக பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. அதிகமாக பிடிக்கப்படுவதன் விளைவாக தென் நீல துடுப்புச் சூரை போன்ற சில சூரை இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
மாலத்தீவில் சூரை மீன்களைக கொண்டு தயாரிக்கப்படும் மாசிக் கருவாடு என்ற உணவு, மாலத்தீவு, இலங்கை, தென்னிந்தியா, கேரளா மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதி மக்களால் உண்ணப்படுகின்றது.
சூரை (Tuna) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த உவர்நீரில் வாழும் மீன் இனம் ஆகும். இதில் 5 பேரினங்களாக மொத்தம் 15 இனங்கள் உள்ளன. இது வேகமாக நீந்தக்கூடிய மீன்களில் ஒன்றாகும். சான்றாக மஞ்சள் துடுப்புச் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் வரை செல்லக் கூடிய திறன் கொண்டது.