dcsimg

கம்பிவால் தகைவிலான் ( التاميلية )

المقدمة من wikipedia emerging languages

ஆங்கிலத்தில் Wire-tailed Swallow என்று அழைக்கப்படும் கம்பிவால் தகைவிலான் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும் .இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் என்பவர் பெயரால்smithilஎன்றழைக்கப்படுகிறது.

பெயர்கள்

தமிழில் :கம்பிவால் தகைவிலான்

ஆங்கிலப்பெயர் :Wire-tailed Swallow

அறிவியல் பெயர் : Hirundo smithil [2]

உடலமைப்பு

14 செ.மீ. - செம்பழுப்புத் தொப்பி அணிந்தது போன்ற தலையும் பளப்பளப்பான கருநீல நிற உடலும் கொண்டது. வெள்ளை வெளேர் என்ற மார்பும் வயிறும் வாலிலிருந்து தொங்கும் 10 செ.மீ. நீளமுள்ள இரண்டு கம்பிகளும் இதனை அடையாளம் கண்டு கொள்ள உதவுபவை.

காணப்படும் பகுதிகள் ,உணவு

தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் ஓரளவு ஆங்காங்கே காணப்படும் இது நீலகிரியில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதான குறிப்பு உள்ளது. கோவை. தஞ்சை மாவட்டங்களில் இதன் நிலைப்பற்றி அறிவதற்கான குறிப்புகள் இல்லை. பழக்க வழக்கங்கள் மற்ற தகைவிலானைப் போன்றதே எனினும் நீர்வளம் மிகுந்த பகுதிகளையே நாடித்திரிவது. பெரும்பாலானவை குளிர் காலத்தில் மற்ற தகைவிலான்களைப் போலவே வடக்கே இருந்து வலசை வந்து திரும்பும். [3]

இனப்பெருக்கம்

சில கம்பி வால் தகைவிலான்கள் நீலகிரியில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

படங்கள்

ترخيص
cc-by-sa-3.0
حقوق النشر
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
النص الأصلي
زيارة المصدر
موقع الشريك
wikipedia emerging languages

கம்பிவால் தகைவிலான்: Brief Summary ( التاميلية )