வெண்கோட்டம் (Cheilocostus speciosus) இது ஒரு பேரின பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் தென்கிழக்காசியாவிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவியதாகத் தெரிகிறது. இத்தாவரத்தின் வேகவைத்த கிழங்கு மருத்துவக் குணம் உடையதாக உள்ளது. இத்தாவரம் குயின்ஸ்லாந்து,சுந்தா பெருந் தீவுகள், இந்தோனேசியா, மொரிசியசு, ரீயூனியன், ஹவாய், கோஸ்ட்டா ரிக்கா, பெலீசு, மெலனீசியா,மைக்குரோனீசியா, பிஜி, மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் [2][3] போன்றவற்றில் காணப்படுகிறது.
இதன் கிழங்கு இஞ்சி போன்ற தோற்றம் கொண்டது, ஆனால் இலைகளைக் கண்டு இந்தத் தாவரத்தை வேறுபடுத்திப் பார்க்கலாம். இதன் வேர்ப்பகுதியில் அமைந்துள்ள கிழங்குகளைக்கொண்டு இனப்பெருக்கம் செய்கிறது. பறவைகள் இதன் விதையை உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில் மருத்துவத்திற்காகப் பயிரிடப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இவை அலங்காரத் தாவரமாகப் பயிரிடப்படுகிறது.
இவை சாலையோரக் கால்வாய்களிலும், மலைப்பகுதியின் தாழ்வாரத்திலும் அதிகமாகக் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களான அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் அதிகமாக வளரும்.
இத்தாவரத்தின் வேர்ப் பகுதி காய்ச்சல், சொறி, ஆஸ்துமா, குடல் அழற்சி மற்றும் குடல் புழுக்கள் போன்ற நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகையான மேற்பூச்சு திரவியத்தால் பாலியல் கவர்ச்சி ஏற்படும் என காமசூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிபிய கடலில் அமைந்துள்ள குவாதலூப்பே என்ற தீவில்
ஹவாய் தீவில் எடுக்கப்பட்ட படம்.
வெண்கோட்டம் (Cheilocostus speciosus) இது ஒரு பேரின பூக்கும் தாவர இனம் ஆகும். இத்தாவரம் தென்கிழக்காசியாவிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவியதாகத் தெரிகிறது. இத்தாவரத்தின் வேகவைத்த கிழங்கு மருத்துவக் குணம் உடையதாக உள்ளது. இத்தாவரம் குயின்ஸ்லாந்து,சுந்தா பெருந் தீவுகள், இந்தோனேசியா, மொரிசியசு, ரீயூனியன், ஹவாய், கோஸ்ட்டா ரிக்கா, பெலீசு, மெலனீசியா,மைக்குரோனீசியா, பிஜி, மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் போன்றவற்றில் காணப்படுகிறது.