வங்காள நரி (Vulpes bengalensis) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி இனம் ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்தில் இருந்து தென் இந்தியாவரைக் காணப்படுகின்றன.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றன.[3][4][5] இவை பகளில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.
இவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அல்குளம் (46 செமீ), இதன் வால் 10 அங்குளம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.
வங்காள நரி (Vulpes bengalensis) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி இனம் ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்தில் இருந்து தென் இந்தியாவரைக் காணப்படுகின்றன. மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றன. இவை பகளில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.