நுணா என்று பொதுவாக அழைக்கப்படும் பேரினம் பூக்கும் தாவரமாகும். இது காஃபி.குடும்பத்தைச் சேர்ந்தது[2] இத்தாவரத்த்தின் ஆங்கிலப் பெயரான மொரிண்டா-வின் முன் ஒட்டுச் சொல்லான மொருஸ் (morus) என்ற சொல் லத்தின் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது மொருஸ் என்றால் இலத்தினில் "முசுக்கொட்டை" ஆகும் மஞ்சள்நாறியின் பழங்கள் முசுகொட்டை பழங்களைப்போல தோன்றுவதால் இச்சொல் இடம்பெற்றது, இச்சொல்லும் பின் ஒட்டில் உள்ள இண்டிகா என்னும் சொல் குறிப்பது இந்தியாவை.[3]
இந்தப்பேரினத்தாவரங்கள் உலகின் அனைத்து வெப்ப வலயப் பகுதிகளிலும் பரவியுள்ளது, இந்தப் பேரினத்தைச் சேர்ந்த மரங்கள், புதர்கள் அல்லது கொடிகள் என 80 இனங்கள் உள்ளன. அனைத்து மொரின்டா இனத் தாவரங்களின்பழங்கள் அல்லது கூட்டுக்கனிகள் சதைபற்று கொண்டவையாகவோ அல்லது உலர்பழங்களாகவோ உள்ளன.[4] இந்த பேரினத்தைச் சேர்ந்த பல இனத் தாவரங்கள் போர்னியோ, நியூ கினி, நியூ கலிடோனியா, வடக்கு ஆத்திரேலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
பாரம்பரிய ஜப்பனிய, கொரிய, சீன மருத்துவத்தில், மொரின்டா பேரினத்தைச் சேர்ந்த வெண்நுணா மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் செயல்திறனுக்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றாலும், உயிரியல் பண்புகளை கொண்ட ஒரு மூலிகை என்று கருதப்படுகிறது.[5]
நுணா என்று பொதுவாக அழைக்கப்படும் பேரினம் பூக்கும் தாவரமாகும். இது காஃபி.குடும்பத்தைச் சேர்ந்தது இத்தாவரத்த்தின் ஆங்கிலப் பெயரான மொரிண்டா-வின் முன் ஒட்டுச் சொல்லான மொருஸ் (morus) என்ற சொல் லத்தின் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது மொருஸ் என்றால் இலத்தினில் "முசுக்கொட்டை" ஆகும் மஞ்சள்நாறியின் பழங்கள் முசுகொட்டை பழங்களைப்போல தோன்றுவதால் இச்சொல் இடம்பெற்றது, இச்சொல்லும் பின் ஒட்டில் உள்ள இண்டிகா என்னும் சொல் குறிப்பது இந்தியாவை.