மயில் உள்ளான் ஒரு கரையோரப்பறவையாகும்...இது சதுப்பு நிலங்களில் காணப்படும்,பொதுவாக ஆப்ரிக்கா தென் இந்தியாவில் உள்ளது.
தமிழில் :மயில் உள்ளான்
ஆங்கிலப்பெயர் :Greater Painted - Snipe
அறிவியல் பெயர் :Rostratula benghalensis [2]
25 செ.மீ. - ஆணும் பெண்ணும் உருவத்தில் வேறுபட்டவையாகக் காட்சிதரும். பெண் வண்ண நிறங்கள் கொண்டது. ஆண், பெண்ணைப்போன்ற வண்ணக் கவர்ச்சித் தோற்றம் அற்றது. பெண்ணின் உடல் பசுமை தோய்ந்த ஆலிவ் பசுமையாக வெளிர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் கீற்றுக்களையும் புள்ளிகளையும் பெற்றிருக்கும்.
தமிழகம் எங்கும் தாவரங்கள் நிறைந்த ஏரி குளங்குட்டைகளை அடுத்த சதுப்பு நிலங்களில் தனித்தோ சிறு கூட்டமாகவோ காலை மாலை அந்திவேளைகளிலும் இரவிலும் நத்தை, நண்டு, புழு, பூச்சி ஆகியவற்றோடு புல் விதைகள், நெல் ஆகியவற்றையும் தேடித் தின்பது. கால்வாயின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரைதேட நீந்தியே செல்லும். சேற்றில் அலகை நுழைத்து இரைதேடும். பெண் ஊக் என நீட்டி இழுத்துக் குரல் கொடுக்கும். முழுநிலா நாட்களில் இரவு முழுதும் இக்கத்தலைக் கேட்கலாம். [3]
ஜுலை முதல் செப்டம்பர் முடிய தரையில் புல் கொத்தாக வளர்ந்துள்ள இடத்தில் ஆண் தட்டு வடிவில் கூடுகட்டித் தர பெண் 4 முட்டைகளிடும்.
மயில் உள்ளான் ஒரு கரையோரப்பறவையாகும்...இது சதுப்பு நிலங்களில் காணப்படும்,பொதுவாக ஆப்ரிக்கா தென் இந்தியாவில் உள்ளது.