சங்கு அல்லது கருவிளை என்பது தாவரப் பேரினமாகும். வெள்ளை, கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், ஊதா கலந்த கருநீலம் என பல நிறங்களில் காணப்படுகின்ற சங்குப்பூ இப்பேரினத் தாவரங்களில் காணப்படுகின்றது. தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோற்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். நீல நிறப்பூவை கருவிளை என குறிப்பிடுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ. குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று.[1] வெள்ளை நிற சங்குப் பூவை செருவிளை என குறிப்பிடுவர்.
காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த செடி ஆசியாவில் தோன்றியது. தற்பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது.
இது கொடி போல் வளர்பவை. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளர்பவை. இதன் பூவில் இருந்து நெற்று தோன்றும். ஒவ்வொரு நெற்றிலும் 6 முதல் 10 விதைகள் இருக்கும். இதன் நெற்று இளசாக இருக்கும் பொழுது சாப்பிடப்படுகிறது. இதன் வேர்கள் உப்பிறப்பு வளியை மண்ணில் நிறுத்துவதால் இது மண்ணின் தன்மையை வளப்படுத்த வளர்க்கப்படுகிறது. துவர்ப்புத் தன்மை வாய்ந்தது.
தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூ பயன்படுத்தப்படுகிறது. பர்மாவில் இப்பூவை தோசை மாவில் கலந்து தோசை செய்யப்படுகிறது. இப்பூ மாலையாக கட்டப்பட்டு கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது. இப்பூவை எலுமிச்சை சாறுடன் சேர்த்து குடிக்கின்றனர்.
இந்த பூவுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளதால் ஆயுர்வேத்தில் பல நூற்றாண்டுகளாக மனதைச் சாந்தப்படுத்துவதற்காக இது பயன்படுத்தபடுகிறது.[2] பண்டைய காலத்தில் கானாரியா மற்றும் மலட்டுதன்மைக்கு மருந்தாகப் பயன்படுத்தபட்டுள்ளது.[3] அண்மைக் காலத்தில் இதன் சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட க்லைடோடைடு புரதக்கூறுகள் நுண்ணுயிர் கொல்லித்திறன் கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4] இதன் சாற்றில் இருந்து நுண்ணுயிர் கொல்லி மற்றும் புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க வாய்ப்புள்ளது.[5] உடலுக்கு சூட்டை தரவல்லதெனவும், கைகால்வலி நீக்க வல்லதாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது.
தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற இந்த பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தினை அடுத்து, இதன் கீழ் அமைந்துள்ள சிற்றினங்களின்(இனம்) பெயர்கள் வருமாறு;-
சங்கு அல்லது கருவிளை என்பது தாவரப் பேரினமாகும். வெள்ளை, கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், ஊதா கலந்த கருநீலம் என பல நிறங்களில் காணப்படுகின்ற சங்குப்பூ இப்பேரினத் தாவரங்களில் காணப்படுகின்றது. தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோற்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். நீல நிறப்பூவை கருவிளை என குறிப்பிடுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ. குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று. வெள்ளை நிற சங்குப் பூவை செருவிளை என குறிப்பிடுவர்.