dcsimg

பெரிய காது பக்கி ( tamil )

fornì da wikipedia emerging languages

பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 to 41 cm (12 to 16 in) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும். [2]

பரவலும் வாழிடமும்

 src=
தலை

இப்பறவையானது தென்கிழக்கு ஆசியாக்கண்டப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், இலங்கை, [3] வங்காளதேசம், [4] இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமானது மிதவெப்ப மண்டல அல்லது தாழ் நிலை வெப்பமண்டல காடுகள் ஆகும்.

நடத்தை

மற்ற இரவாடிகளைப் போலவே இவை அந்தியிலும், இரவில் இயங்கக்கூடியன.

இனப்பெருக்கம்

இவை தரையை சரண்டி அதில் தங்கள் கூட்டை அமைத்து அதில் முட்டையிடுகின்றன. இதன் குஞ்சுகள் மக்கிய இலைத் துகல்களில் உருமறைப்பு செய்துகொள்கின்றன. [5]

குறிப்புகள்

  1. "Lyncornis macrotis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 5 July 2016.
  2. CRC Handbook of Avian Body Masses, 2nd Edition by John B. Dunning Jr. (Editor). CRC Press (2008), ISBN 978-1-4200-6444-5.
  3. Soysa, W. C., A. A. T. Amarasinghe and D. M. S. S. Karunarathna (2007). A record of the Great Eared Nightjar Eurostopodus macrotis Vigors, 1830 (Aves: Caprimulgidae), from Sri Lanka, Siyoth, 2 (1): 88-90.
  4. http://oldredlist.iucnredlist.org/details/22689690/0
  5. Strijk JS (2004). "Description of the nest and nestling of Great Eared Nightjar Eurostopodus macrotis from Luzon, Philippines". Forktail 20: 128–129. Archived from the original on 2011-06-10. https://web.archive.org/web/20110610155059/http://www.orientalbirdclub.org/publications/forktail/20pdfs/Strijk-Nightjar.pdf.
licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பெரிய காது பக்கி: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 to 41 cm (12 to 16 in) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும்.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்