dcsimg
Image of European Black Nightshade
Creatures » » Plants » » Dicotyledons » » Nightshades »

European Black Nightshade

Solanum nigrum L.

மணித்தக்காளி ( Tamil )

provided by wikipedia emerging languages

மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1]

மற்ற பெயர்கள்

இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.[2]

காகமாசீ,உலகமாதா,விடைக்கந்தம்,வாயசம் போன்றன ஆகும்.

சுக்குட்டி கீரை

மணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.

மருத்துவப் பண்புகள்

இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.உடற்றேற்றி,சிறுநீர் பெருக்கி,வியர்வைப்பெருக்கி,கோழையகற்றி செய்கைகள் உள.

மருத்துவப் பயன்

இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.

மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.

மணத்தக்காளிக்காய் வாந்தியைப் போக்கும்.வாயிலைப்பை நீக்கும்.

வற்றல் அரோசகத்தை நீக்கும்.

காகமாசிதைலம் இருமல் இளைப்பை நீக்கும்.

மேற்கோள்கள்

3.குணபாடம் (முதல் பாகம்) -Siddha materia medica -வைத்திய ரத்தினம் க.ச.முருகேசன்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மணித்தக்காளி: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்