dcsimg

கூம்பலகன் ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
ஆண் பறவை

கூம்பலகன் அல்லது சாதா கூம்பலகுச் சில்லை (common rosefinch) என்பது ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் வாழக்கூடிய ஒரு பறவையாகும். பொதுவாக இப்பறவை மழைக் காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரக்கூடியது. சிறு கூட்டமாக திரியக்கூடியது.

பெயர்கள்

தமிழில் :கூம்பலகன்

ஆங்கிலப்பெயர் :Common Rosefinch

அறிவியல் பெயர் :Carpodacus erythrinus

விளக்கம்

15 செ.மீ. அளவு உடைய, இப்பறவைகளில் ஆண்பறவை அழகான ரோசா நிறத்தில் தலை, நெஞ்சு, முதுகு, தோள் ஆகியவை கொண்டிருக்கும். பெண்பறவை பசுமை கலந்த தவிட்டு நிறம் கொண்டது. இரு பாலினத்திற்கும் அலகு ஒன்று போல இருக்கும். வால் பிளவு பட்டிருக்கும்.

உணவு

பயிர்களின் தானியங்களை கொத்தித் தின்னும். அரசு, ஆல், உன்னி போன்றவற்றின் பழங்களையும் முள் முருங்கை போன்ற சில பூக்களின் தேனையும் உண்ணும்.டிவீஇ. டிவீஇ டிவீஇயு என்றோ டி.டி.யூ எனவோ குரல் கொடுக்கும். [2]

 src=
கூம்பலகன் பறவையின் முட்டைகள்

மேற்கோள்

  1. "Carpodacus erythrinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:150
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கூம்பலகன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= ஆண் பறவை