பால்பெருக்கி (Euphorbia heterophylla) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. [2]
சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தாமாக வளரும் தன்மைகொண்ட இத்தாவரம் 30 செமீ, முதல் 70 செமீ வரை உயரம் கொண்டதாக உள்ளது.[3]
பால்பெருக்கி (Euphorbia heterophylla) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கள்ளி குடும்ப தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ நாட்டின் பகுதியாகும். மேலும் கலிபோர்னியா, டெக்சஸ், மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தி சாகுபடிகளின் ஊடாக களை போல் வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் தாய்லாந்து, இந்தியாவில் பல பகுதிகளில் அலங்கார தாவரமாக தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது.
சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் தாமாக வளரும் தன்மைகொண்ட இத்தாவரம் 30 செமீ, முதல் 70 செமீ வரை உயரம் கொண்டதாக உள்ளது.