dcsimg

அரசன் (பட்டாம்பூச்சி) ( tamili )

tarjonnut wikipedia emerging languages

மொனார்க் (Monarch butterfly, Danaus plexippus) கண்கவர் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சியாகும். இவை ஒவ்வொரு மாரி காலத்திலும் கனடாவிலிருந்து மெக்சிக்கோ மற்றும் கலிபோர்னியா வரை 4000 மைல் தூரம் வரை பறந்து செல்கின்றன. ஒரு திசையில் மட்டும் பறக்கக்கூடிய இவையால் மீண்டும் கனடா திரும்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இவற்றின் குஞ்சுகள் மீண்டும் கனடாவுக்குள் பிரவேசிக்கின்றன. இதன் பிறப்பிடம் முக்கியமாக வட அமெரிக்கா என்றாலும் இது மெக்ஸிகோ, கியூபா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசிபிக் தீவுகள், கலிபோர்னியா, ஃப்ளோரிடா போன்ற நாடுகளிலும் காணப் படுகிறது. இதன் செம்மஞ்சள் வண்ணம் அதனை உண்ணும் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்னை உண்ணாதே என்பதுதான். இவைகள் ஒரு நாளைக்கு 250 கி.மீ தொலைவு பறக்கக் கூடியவை. இவைகளின் எதிரிகள் இவைகளைத் துரத்தும் போது ஒரு நிமிடத்திற்கு 120 தடவை சிறகுகளை அடிக்கக் கூடியவை. இதன் மற்ற பொதுப் பெயர்கள் மில்க் வீட், (எருக்கஞ் செடியில் இருப்பதால்), காமன் டைகர் ( புலி போன்ற வடிவம் கொண்டுள்ளதால்), வாண்ட்ரர் (வலசைப் போவதால்) ஆகும். இந்த வண்ணத்துப் பூச்சியின் வலசைப் போதல் நிகழ்வு இதனை மற்ற பூச்சிகளிடமிருந்து வேறு படுத்திக் காட்டுகிறது. .[1]

வலசைப் போதல்

இவ்வண்ணத்துப் பூச்சிகளின் வலசைப் போதல் என்பது இவ்வுலகின் மிகவும் இயற்கையான கண்கவர் நிகழ்வு என்று ஆர்வலர்கள் விவரிக்கின்றனர். வட அமெரிக்காவின் அதிகப் படியான குளிரைத் தாங்க முடியாத இவைகள் தங்கள் பயணத்தை தெற்கு பாகத்தில் உள்ள மெக்ஸிகோ மற்றும் ஃப்ளோரிடா நோக்கித் துவங்குகின்றன. ஆனால் திரும்பி வருவது நான்காவது சந்ததிதான். இவைகளின் இப்பயணத்தில் இவைகள் 3000 கி.மீ பயணிக்கின்றன. இவைகள் திரும்பி வரும்போது அவற்றின் பெற்றோர் எந்த மரத்தில் தங்கி இளைப்பாறியதோ அதே மரத்தில் பின் சந்ததி தங்குவது ஒரு ஆச்சரியமே.செப்டம்பர் அல்லது அக்டோபரில் இவை தங்கள் பயணத்தைத் துவக்கி நவம்பரில் அங்கு சென்று சேரும். திரும்பி வர தங்கள் பயணத்தை மார்ச்சில் துவக்கி ஜூலையில் முடிக்கும். ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்தில் உள்ள வண்ணத்துப் பூச்சிகள் சிறு சிறு வலசை மேற்கொள்ளும்

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages

அரசன் (பட்டாம்பூச்சி): Brief Summary ( tamili )

tarjonnut wikipedia emerging languages

மொனார்க் (Monarch butterfly, Danaus plexippus) கண்கவர் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சியாகும். இவை ஒவ்வொரு மாரி காலத்திலும் கனடாவிலிருந்து மெக்சிக்கோ மற்றும் கலிபோர்னியா வரை 4000 மைல் தூரம் வரை பறந்து செல்கின்றன. ஒரு திசையில் மட்டும் பறக்கக்கூடிய இவையால் மீண்டும் கனடா திரும்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இவற்றின் குஞ்சுகள் மீண்டும் கனடாவுக்குள் பிரவேசிக்கின்றன. இதன் பிறப்பிடம் முக்கியமாக வட அமெரிக்கா என்றாலும் இது மெக்ஸிகோ, கியூபா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசிபிக் தீவுகள், கலிபோர்னியா, ஃப்ளோரிடா போன்ற நாடுகளிலும் காணப் படுகிறது. இதன் செம்மஞ்சள் வண்ணம் அதனை உண்ணும் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்னை உண்ணாதே என்பதுதான். இவைகள் ஒரு நாளைக்கு 250 கி.மீ தொலைவு பறக்கக் கூடியவை. இவைகளின் எதிரிகள் இவைகளைத் துரத்தும் போது ஒரு நிமிடத்திற்கு 120 தடவை சிறகுகளை அடிக்கக் கூடியவை. இதன் மற்ற பொதுப் பெயர்கள் மில்க் வீட், (எருக்கஞ் செடியில் இருப்பதால்), காமன் டைகர் ( புலி போன்ற வடிவம் கொண்டுள்ளதால்), வாண்ட்ரர் (வலசைப் போவதால்) ஆகும். இந்த வண்ணத்துப் பூச்சியின் வலசைப் போதல் நிகழ்வு இதனை மற்ற பூச்சிகளிடமிருந்து வேறு படுத்திக் காட்டுகிறது. .

lisenssi
cc-by-sa-3.0
tekijänoikeus
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
alkuperäinen
käy lähteessä
kumppanisivusto
wikipedia emerging languages