மரப்பல்லி (Gecko) என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பல்லி ஆகும். இவை 1.6 செமீ முதல் 60 செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் இரவாடும் இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.[6]
பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளன. தோராயமாக உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.
புதிய இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் உள்ள gekko, gecko என்ற சொற்கள், இந்தோனேசிய, மலாய் மொழிகளில் உள்ள gēkoq என்ற சொல்லில் இருந்து வருகிறது. இச்சொல், இப்பல்லிகள் எழுப்பும் ஒலியை ஒத்துள்ளன.[7]
மரப்பல்லி (Gecko) என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பல்லி ஆகும். இவை 1.6 செமீ முதல் 60 செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் இரவாடும் இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.
பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளன. தோராயமாக உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.
புதிய இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் உள்ள gekko, gecko என்ற சொற்கள், இந்தோனேசிய, மலாய் மொழிகளில் உள்ள gēkoq என்ற சொல்லில் இருந்து வருகிறது. இச்சொல், இப்பல்லிகள் எழுப்பும் ஒலியை ஒத்துள்ளன.