dcsimg

அடும்பு ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı
 src=
பூவுடன் அடும்புக் கொடி
 src=
தரையில் படர்ந்திருக்கும் அடும்புக் கொடி

அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's Foot; Ipomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில்நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிதை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது (Dicotyledons). [மலையாளப் பெயர்: அடும்பு வள்ளி, இந்திப்பெயர்: டோப்படிலேடா]

கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக்கூடியது அடம்பு.பல்வேறு நன்மைகளைக் கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்புவின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும் புக்கள் நீல நிறத்திலும் காணப்படும். அாிய வகை மருத்துவ மூலிகையானது வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது. [2]

உசாத்துணைகள்

  • பி. எல். சாமி, 'சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்' , திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம், 1967, பக். 1-184.
  • மா. ந. புஷ்பா, , குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் தொகுப்பேடு , அரசுத் தொல்லியல், அருங்காட்சியகத் துறையின் ஆணையர், சென்னை 6000 008, ஆண்டு 2002, பக். 1-84
  1. "Taxon: Ipomoea pes-caprae (L.) R. Br.". Germplasm Resources Information Network. Beltsville, Md.: National Genetic Resources Program, Agricultural Research Service, USDA (9 May 2011). பார்த்த நாள் 27 March 2012.
  2. சக்தி சுப்ரமணியன் (நவம்பா் 2015). "மூட்டு வலியை குணமாக்கும் அடம்பு". தமிழ் மாலை முரசு (மதுரை): பக்க எண் 2. doi:05-11-2015.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

அடும்பு: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı
 src= பூவுடன் அடும்புக் கொடி  src= தரையில் படர்ந்திருக்கும் அடும்புக் கொடி

அடும்பு அல்லது அடம்பு (Beach Morning Glory / Goat's Foot; Ipomoea pes-caprae) என்பது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும். சங்க இலக்கியங்களின் பல பாடல்களில்நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிதை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது (Dicotyledons). [மலையாளப் பெயர்: அடும்பு வள்ளி, இந்திப்பெயர்: டோப்படிலேடா]

கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக்கூடியது அடம்பு.பல்வேறு நன்மைகளைக் கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்புவின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும் புக்கள் நீல நிறத்திலும் காணப்படும். அாிய வகை மருத்துவ மூலிகையானது வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்