மஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre) என்பது மிக அண்மையில் (2005 ஆம் ஆண்டு) தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்ட ஒரு சருகுமான் இனமாகும். இலங்கையின் ஈரவலயத்தில் காணப்படும் இவ்விலங்கு இலங்கைக்குத் தனிச் சிறப்பானதாகும்.
இவ்வினம் வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna) இனத்திலும் தனியானதாகக் கருதப்பட்டு இனப் பாகுபாட்டு முறையைப் பயன்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளது.[2] மஞ்சட் கோட்டுச் சருகுமான் தனியினமாகக் குறிக்கப்பட்டது மிக அண்மைக் காலத்தில் என்பதால் இதனைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களும் மிகக் குறைவாகவே உள்ளன.
மஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre) என்பது மிக அண்மையில் (2005 ஆம் ஆண்டு) தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்ட ஒரு சருகுமான் இனமாகும். இலங்கையின் ஈரவலயத்தில் காணப்படும் இவ்விலங்கு இலங்கைக்குத் தனிச் சிறப்பானதாகும்.
இவ்வினம் வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna) இனத்திலும் தனியானதாகக் கருதப்பட்டு இனப் பாகுபாட்டு முறையைப் பயன்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளது. மஞ்சட் கோட்டுச் சருகுமான் தனியினமாகக் குறிக்கப்பட்டது மிக அண்மைக் காலத்தில் என்பதால் இதனைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களும் மிகக் குறைவாகவே உள்ளன.