தாவரவியல் பெயர்:கிராம்மட்டோபைலம் ஸ்பிசியோசம் (Grammatophyllum Speciosum)
குடும்பம்:ஆர்க்கிடேசியீ (Orchidaceae)
ஆர்க்கிடுகளின் ராணி (Queen of orchids)
கடிதச் செடி (Letter Plant)
தாவரக் குடும்பங்களில் மிகப் பெரிய குடும்பம் ஆர்க்கிடேசியீ குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 30,000 இனச் செடிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய செடி இது ஆகும். இது மரங்கள் மீது தொற்றுச் செடிகளாக வளர்கின்றது. இவற்றின் அடிப்பகுதியில் பொய்க் கிழங்கு உள்ளன. இதனுடைய தண்டு 6-10 அடி உயரம் வளரக்கூடியது. இலைகள் 1-2 அடி நீளத்திற்க தண்டில் இரண்டு வாpசையில் உள்ளது. பூங்கொத்து 8 அடி நீளத்திலும், சுமார்; 70 முதல் 100 பூக்கள் கொண்டும் உள்ளது. இதனுடைய பூக்கள் பெரியதாகவும், மஞ்சள் மற்றும் சிவப்பு கருஞ்சிவப்பு புள்ளிகளுடன் இருக்கும். இவ்வினத்தில் 8 சாதிகள் உள்ளன. இச்செடி ஜாவா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளர்கிறது. ஜாவாவில் உள்ள மரத்தில் 18 அடி சுற்றி இச்செடி தொற்றி படர;ந்து வளர;ந்துள்ளது. மரத்தில் 8 அடி நீளத்திற்கு வேர்கள் ஒட்டி உள்ளன.
| 1 || சிறியதும் - பெரியதும் [3] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001