dcsimg

மல்லிகை ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை (சஞ்சிகை) பக்கத்துக்குச் செல்லுங்கள்.

 src=
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்ட தலக்கோணாக் காட்டில் மல்லிகை முல்லை.

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

ஜாஸ்மினம்[1] என்று பண்டைய ஃபிரஞ்சு[2] மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு"[3][4][5] எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.

பொருளடக்கம்

இனங்கள்

இதில் பின்வரும் இனங்கள் அடங்கும்:

  • ஜாஸ்மினம் அபிசினியம் ஹொகெஸ்ட். எக்ஸ் டிசி. – காட்டு மல்லி
  • ஜாஸ்மினம் அடின்னோஃபில்லம் சுவர் – பின்வீல் ஜாஸ்மின், பிளூகிரேப் ஜாஸ்மின், பிரின்சஸ் ஜாஸ்மின், செ வாங்க், லாய் லா கோ டுயென்[6]
  • ஜாஸ்மினம் டிகோடோனம் வாஹில் – தங்கக் கடற்கரை மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் கிராண்டிஃபிளோரம் L. – ஸ்பானிசிய ஜாஸ்மின்,[7] ராயல் ஜாஸ்மின்,[7] காட்டலோனியன் ஜாஸ்மின்[7]
  • ஜாஸ்மினம் ஹியுமைல் எல். – இத்தாலிய மஞ்சள் மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் லான்சியோலாரியம் ராக்ஸெப்.
  • ஜாஸ்மினம் மென்சியி ஹான்ஸ் – ஜப்பானிய மல்லிகை,[7] மஞ்சள் வண்ண மல்லிகை,[7] மஞ்சள் ஜாஸ்மின்[7]
  • ஜாஸ்மினம் நெர்வோசம் லௌர்.
  • ஜாஸ்மினம் ஓடோராடிசியம் எல். – மஞ்சள் மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் அஃபிசினேலி எல். – வழக்கமான மல்லிகை,[7] கவியின் மல்லிகை,[7] ஜாஸ்மின்,[7] ஜெஸாமின்[7]
  • ஜாஸ்மினம் பார்கெரி டுன் – குள்ள மல்லிகை[8]
  • ஜாஸ்மினம் பாலியாந்தம் ஃபிராஞ்ச்.
  • ஜாஸ்மினம் சாம்பாக் (எல்.) ஐட்டன் – அராபிய மல்லிகை[7]
  • ஜாஸ்மினம் சினென்சி ஹெம்செல்.
  • ஜாஸ்மினம் யூரோஃபில்லம் ஹெம்செல்.

பயிரிடலும் பயன்பாடுகளும்

வணிக ரீதியாக மலர்களுக்காகப் பரவலாகப் பயிரிடப்படும் மல்லிகையை வீட்டுத்தோட்டத்தில் பூசைக்காகவும் பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும் வளர்க்கப்படுகிறது.

மல்லிகைத் தேநீர்

சீனாவில் ஜாஸ்மின் தேநீரைப் பருகுகின்றனர். அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் (茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா) என்றழைக்கிறார்கள். ஜாஸ்மினம் சாம்பாக் மலர்களும் மல்லிகைத் தேநீர் உருவாக்கப் பயன்படுகின்றன. இது பெரும்பாலும், பச்சைத் தேநீர் என்பதன் அடிப்படையில் அமைந்தது. ஆனால், சில நேரங்களில் ஓலாங்க் அடிப்படையும் பயன்படுகிறது. வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களில் மலர்கள் மற்றும் தேயிலை ஆகியவை "இணைவுறுத்தப்படுகின்றன". மல்லிகை மலரின் வாசம் மற்றும் நறுமணம் ஆகியவற்றை உட்கிரகிப்பதற்குத் தேயிலைக்கு நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். மிக உயர் தரங்களுக்கு இந்த செய்முறையானது ஏழு முறைகள் வரையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும். காரணம், மலர்களின் உள்ளார்ந்த ஈரப்பசையை தேயிலை உட்கிரகித்து விட்டால், அது கெடாதிருக்க அதனை மறுதீயிட வேண்டும். பயனபட்டு விட்ட மலர்களை இறுதிப் பொருளிலிருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் விடலாம். காரணம் இந்த மலர்கள் முழுதும் வறண்டு வாசமற்றே இருக்கும். அடர்த்தி மிகுதியான தேயிலைகளிலிருந்து இதழ்களை ஊதி நீக்குவதற்கு ராட்சசக் காற்றாடிகள் பயன்படுகின்றன. தேயிலையில் இவை இருந்தாலும் பார்வைக்கு அதன் அழகைக் கூட்டுவதைத் தவிர, தேயிலையின் தரத்திற்கு எந்த விதமான சுட்டிக்காட்டலையும் வழங்குவதில்லை.

மல்லிகை இனிப்புக் கூழ்

ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக் கூழ் புகழ் பெற்றது. பெரும்பாலும், மல்லிகை மலர்ச் சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக் கூழ் சிறு ரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது.

மல்லிகைச் சார எண்ணெய்

மல்லிகைச் சார எண்ணெய் பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது.

தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணெய்க்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணெயில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச் சார எண்ணெய் தயாரிக்கும் நாடுகளில் சில இந்தியா, எகிப்து, சீனா மற்றும் மொரோக்கோ ஆகியவை.

வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படும் மல்லிகைத் தனிமானி

இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல் மற்றும் சிகேடோல் ஆகியவற்றை உள்ளடக்கும். மல்லிகையின் பல இனங்கள் ஒரு தனிமானியையும் நல்குகின்றன. இது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உருவாக்கப் பயன்படுகிறது.

கலாசார முக்கியத்துவமும் இதர தகவல்களும்

 src=
12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாவோ சாங்க் என்னும் சீனக் கலைஞர் மசி மற்றும் வண்ணம் கொண்டு பட்டுத்துணியில் வரைந்த வெண்ணிற மல்லிகைக் கொடி

பின்வரும் நாடுகளில் மல்லிகை தேசிய மலர் என விளங்குகிறது.

  • ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அது தேசிய மலராகும். இங்கு அது சமப்கியுட்டா என்று வழங்குகிறது. பொதுவாக, மத ரீதியான பிம்பங்களுக்குச் சூட்டப்படும் மாலைகளில் பயன்படுகிறது.
  • இந்தோனேசியா நாட்டில் ஜாஸ்மின் சாம்பக் இனம் "புஷ்ப பங்க்ஸா "வாக (தேசிய மலர்) "மெலட்டி " என்னும் பெயர் கொண்டுள்ளது இந்தோனேசியாவின் பழங்குடியினருக்கு, குறிப்பாக ஜாவா தீவில் வசிப்போருக்கு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் இது முக்கியமான மலராகும்.
  • பாகிஸ்தான் நாட்டில் ஜாஸ்மினம் அஃபிசினேலி , "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைக்கப்படும் இது அந்நாட்டின் தேசிய மலர் ஆகும்.

சிரியா நாட்டில் இது டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலராகும். இந்த நகரே மல்லிகை நகர் என அழைக்கப்படுகிறது.

ஜே.ஃபிளூமினென்ஸ் , ஹவாய் நாட்டில் ஒரு ஊடுருவி இனம் என்பதாக உள்ளது. இங்கு இது சில நேரங்களில், அவ்வளவாகத் துல்லியமற்றதான, "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

ஜே.டிகோட்டம் என்பது ஃபுளோரிடாவிலும் ஊடுருவியுள்ளது.

தாய்லாந்து நாட்டில், மல்லிகை மலர்கள் அன்னை என்னும் கருத்துருவின் சின்னமாகப் பயன்படுகின்றன.

ஜப்பான் நாட்டின் ஓகினாவாவில், மல்லிகைத் தேநீர் சன்பின் ச்சா (さんぴん茶) எனப்படுகிறது.

இந்தியாவில் மல்லிகையின் கலாசார முக்கியத்துவம்

 src=
இந்தியாவின் சென்னையில் ஒரு மல்லிகை விற்பனையாளர்
 src=
ஊசிமல்லிச் சரம்
  • இந்தியாவில் மல்லிகை மலரை, அதன் இன வகையைப் பொறுத்து, பல மொழிகளிலும், சில இடங்களில் ஒரு பெயராகவும், பிறவற்றில் வேறு பெயர்களிலுமாக பல பெயர்களில் வழங்குகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:
சமிஸ்கிருத மொழியில் "மாலதி " அல்லது "மல்லிகா "
இந்தி மொழியில் "சமேலி ", "ஜூஹி ", அல்லது "மோத்தியா " என வழங்குகிறது. இறுதியாகக் கூறப்பட்டது சிறு புதர்களாகவும் சில நேரங்களில் கொடியாகவும் வளரும் ஒரு அடர் வகையாகும்.

"மோத்தி " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் "முக்தா " அல்லது "முக்தாமணி " அல்லது "மௌடிகா " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு). இந்தி மொழியில் இது முத்து எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் "மோத்தியா " என்னும் பெயர் பெற்றது.

மராத்தி மொழியில், "ஜாயீ ", "ஜூயீ ", "சாயாலீ ", "சமேலி " அல்லது "மொகாரா " என இதனை வழங்குகின்றனர். இறுதியாகக் கூறியது இந்தியில் "மோத்தியா " என்பதாகும். முதலாவது சிற்றிலைகளும், பெரிய இதழ்களும் கொண்டுள்ளது. இரண்டாவது இதற்கு நேர்மாறானது. மூன்றாவது குழமத் தன்மை கொண்டது (மராத்தி மொழியில் சாய் என்பது குழமம் எனப் பொருள்படும்). நான்காவது பிறிதொரு வகையாகும்.

வங்காள மொழியில் "ஜூயி "

தெலுங்கு மொழியில் "மல்லே "

  • இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது. தெலுங்கு மொழியில் இதை மல்லே என அழைக்கின்றனர். இரு மலரொட்டியுள்ள மல்லிகை குண்டு மல்லே எனப்படுகிறது.
  • மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம். இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.
  • மல்லிகை மலரைப் பெண்டிர், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.
  • இந்தியா வின் கர்நாடக மாநிலத்தின் பங்களா பகுதியில் பயிராகும் மல்லிகை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

காட்சிக்கூடம்

குறிப்புகள்

  1. Sunset Western Garden Book, 1995:606–607
  2. http://www.thinkbabynames.com/meaning/0/Jasmin
  3. "jasmine." Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002.
  4. "jasmine" Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002.
  5. Metcalf, 1999, p. 123
  6. Bluegrape jasmine
  7. 7.00 7.01 7.02 7.03 7.04 7.05 7.06 7.07 7.08 7.09 7.10 7.11 7.12 7.13 "GRIN Species Records of Jasminum accessdate=2008-12-13". Germplasm Resources Information Network (GRIN). United States Department of Agriculture, Agricultural Research Service, Beltsville Area.
  8. "Jasminum parkeri". NC State University. பார்த்த நாள் 2008-12-13.

புற இணைப்புகள்

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மல்லிகை: Brief Summary ( Tamilce )

wikipedia emerging languages tarafından sağlandı

இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை (சஞ்சிகை) பக்கத்துக்குச் செல்லுங்கள்.

 src= இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்ட தலக்கோணாக் காட்டில் மல்லிகை முல்லை.

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

ஜாஸ்மினம் என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு" எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.

lisans
cc-by-sa-3.0
telif hakkı
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்