இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன.[2]
ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும் மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் காணப்படுகின்றது.[1]
தமிழ் நாட்டில்/இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:
இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன.