Hatun kawallu chupa icha Mulla muqu-muqu (Equisetum giganteum) nisqaqa huk rikch'aq kawallu chupam, Awya Yalapi wiñaq.
Hatun kawallu chupa icha Mulla muqu-muqu (Equisetum giganteum) nisqaqa huk rikch'aq kawallu chupam, Awya Yalapi wiñaq.
தாவரவியல் பெயர் :ஈக்குசெட்டம் ஜைகாண்டியம் Equisetum giganteum
குடும்பம்:ஈக்குசெட்டேசியீ (Equisetaceae)
இச்செடி 13 அடி உயரம் வளரக்கூடியது. ஈரமான மணல் நிறைந்த பகுதியில் வளர;கிறது. இதன் அடிப்பகுதி மட்டத்தண்டு உடையது. இதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்த தண்டு வித்தியாசமானது. தண்டு துவாரம் உடையது. தண்டின் பகுதி துண்டு துண்டாக காடியில் இணைந்து நீண்டு உள்ளது. இவற்றில் சிறிய செதில் இலைகள் உள்ளன. இந்த தண்டில் கிளைகள் சுற்றி உள்ளன. இந்த அமைப்பை பார்க்கும்போது குதிரையின் வாலில் உள்ள முடிபோல் உள்ளது. இதனுடைய தண்டு இணைந்த பகுதியில் மணல் போன்ற சிலிக்கா உள்ளது.
இன்று நம் வீடுகளில் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதற்கு கம்பி ரோமங்களை பயன்படுத்துகிறோம். பழங்காலத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்ய இந்தச் செடியை பயன்படுத்தினார்கள். இச்செடி மூலம் பாத்திரத்தை சுத்தம் செய்தால் பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருக்கும். பாத்திரம் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள் இச்செடியை வீடுகளில் வளர்த்து வந்துள்ளனர்.
இது தென் அமெரிக்காவில் வளர;கிறது. 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் அதிக அளவில் காடுகளில் வளர்ந்தன. 100 அடி உயரம் உள்ளது கூட வளர்ந்திருந்தது. இவைகள் நிலக்கரியாக மாறிவிட்டது. இச்சாதியில் 25 இனச்செடிகள் மட்டுமே உள்ளது. இவற்றில் பூக்கள் வருவது கிடையாது. விதைத்துகள்கள் மூலம் புதியச் செடி முளைக்கிறது.
| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001