கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.
இதன் காய்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய்,கொரிக்கலிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.பழந்தமிழர்களால் மருந்தாக பயன்பட்ட இதனை உக்காமரம் என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இலைகள் ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்கப்படுகிறது[3].
கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.
இதன் காய்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய்,கொரிக்கலிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.பழந்தமிழர்களால் மருந்தாக பயன்பட்ட இதனை உக்காமரம் என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இலைகள் ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்கப்படுகிறது.