dcsimg

சாதாக்கெண்டை மீன் ( tamil )

fornì da wikipedia emerging languages

சாதாக்கெண்டை மீன் (common carp) என்பது கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம்

இக்கெண்டையின் தலைப்பகுதி சிறியதாக இருக்கும். இம்மீனின் வாய் கீழ் நோக்கி அமைந்திருக்கும்.

உணவுப் பழக்கம்

இது குளத்தின் அடிப்பகுதியில் வாழக்கூடியது. குளத்தின் அடிப்பகுதியில் உள்ள நத்தை, சிப்பி, பூச்சி புழுக்களை உண்டு வாழக்கூடியது. இது ஓர் ஆண்டில் 1.5 கிலோ வரை வளரும்.

இனப்பெருக்க காலம்

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்குப் பருவ மழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இயற்கை சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை

  1. "Cyprinus carpio". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). பார்த்த நாள் 6 April 2014.
licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

சாதாக்கெண்டை மீன்: Brief Summary ( tamil )