அழுங்காமை (Hawksbill turtle): கடல் ஆமைகளில் மிகவும் அழகான ஒன்று. இதன் அறிவியல் பெயர் Ertmochelys Imbricata ஆகும். அழுங்காமை தவிட்டு நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய மேலோட்டைப் பெற்றிருக்கும். இவற்றின் உதடுகள் பருந்தின் அலகுபோல அமைந்திருப்பது இவற்றின் சிறப்புத் தன்மையாகும். உதடுகளைப் பயன்படுத்தி இவை சிப்பிகளை உடைத்துத் தின்னும். ஒரு மீட்டர் நீளம்வரை வளரும். அந்தமான் கடலில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அரிதாக இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு முட்டையிடுவதற்காக வருவதுண்டு. ஒரு முறையில் இவை, 96 முதல் 182 முட்டைகள்வரை இடும். இவற்றின் இறைச்சி விஷத்தன்மையுள்ளது. எனவே இவற்றை யாரும் உண்பதில்லை. ஆயினும் இவற்றின் அழகான மேல் ஓட்டுக்காக இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன.[2]
அழுங்காமை (Hawksbill turtle): கடல் ஆமைகளில் மிகவும் அழகான ஒன்று. இதன் அறிவியல் பெயர் Ertmochelys Imbricata ஆகும். அழுங்காமை தவிட்டு நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய மேலோட்டைப் பெற்றிருக்கும். இவற்றின் உதடுகள் பருந்தின் அலகுபோல அமைந்திருப்பது இவற்றின் சிறப்புத் தன்மையாகும். உதடுகளைப் பயன்படுத்தி இவை சிப்பிகளை உடைத்துத் தின்னும். ஒரு மீட்டர் நீளம்வரை வளரும். அந்தமான் கடலில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அரிதாக இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு முட்டையிடுவதற்காக வருவதுண்டு. ஒரு முறையில் இவை, 96 முதல் 182 முட்டைகள்வரை இடும். இவற்றின் இறைச்சி விஷத்தன்மையுள்ளது. எனவே இவற்றை யாரும் உண்பதில்லை. ஆயினும் இவற்றின் அழகான மேல் ஓட்டுக்காக இவை பெருமளவில் கொல்லப்படுகின்றன.