அக்கேசியா ட்ரிபனோலோபியம் அல்லது விசில் அடிக்கும் மரம் அல்லது விசில் முள் என்பது கிழக்கு ஆபிரிக்காவை தாயகமாக் கொண்ட ஒரு மரமாகும்.
இது ஒரு சிறிய மரம் ஆகும். கிளைகள் கிடைமட்டமாக வளர்கிறது. மேல்பகுதி தட்டையாக இருக்கும். பட்டை கருப்பாக இருக்கும். இம்மரத்தில் நீண்ட வெள்ளை முட்கள் 8 செ.மீ. நீளத்திற்கு உள்ளது. இவற்றில் வரும் பூக்கள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும். பூக்கள் வாசனை உடையது.
ஓவ்வொரு முள்ளின் அடியிலும் பருத்த, வெற்றிடமான பை போன்றுள்ளது. இந்த காலி இடத்தில் எறும்புகள் உள்ளே போய் தங்குகின்றன. எறும்புகள் வெளியே வந்த பிறகு, காற்று துவாரத்தின் மூலம் உள்ளே செல்லும்போது விசில் போன்ற சப்தம் வருகிறது. மரத்தில் உள்ள அனைத்து வெற்றிடத்தின் உள்ளே காற்று சென்று வரும்போது அதிகப்படியான விசில் சப்தம், ஒரு வகையான சங்கீத ஒலி வருகிறது.
இம்மரம் ஆப்பிரிக்காவில் வளர்கிறது. கென்யா, உகாண்டா ஆகிய பகுதிகளிலும் வளர்கிறது. இந்த சாதியில் 70 இன மரங்கள் உள்ளன.
| 1 || சிறியதும் - பெரியதும் [2] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
அக்கேசியா ட்ரிபனோலோபியம் அல்லது விசில் அடிக்கும் மரம் அல்லது விசில் முள் என்பது கிழக்கு ஆபிரிக்காவை தாயகமாக் கொண்ட ஒரு மரமாகும்.