Zebrica (latinski: Danio rerio) je vrsta tropske slatkovodne ribe iz roda Danio, porodice Cyprinidae (šarani). Vode porijeklo iz potoka i rižinih polja Indije, a u Evropu je unijeta 1905. godine. Može se sresti i u vodama Bangladeša, Pakistana i Nepala, a kao neželjeni kućni ljubimci dospjeli su i u vode Kolumbije. Vrlo su popularne akvarijumske ribe, lahke za gajenje i razmnožavanje, a koriste se i u naučne svrhe.
Brza je i vrlo živahna riba, svijetlosivog tijela, a prepoznatljiva je po četiri horizontalne pruge tamnije sive ili sivoplave boje. Pruge se protežu od škržnih poklopaca pa do repa, koji je blijedomliječne boje. Odlika cijele porodice su brčići koji se daju primjetiti i kod zebrice. Spolni dimorfizam je očit: ženke su veće od mužjaka i dosta krupnijeg, rozog stomaka. Maksimalna dužina ženke je 6 cm. Između tamnijih pruga kod mužjaka se nalaze zlatnožute pruge, koje su kod ženke sive boje. Životni vijek zebrica iznosi otprilike 5 godina.
Idealna temperatura vode iznosi 23 °C, ali u akvarijumu ona nije od velikog značaja. Sposobnosti ove ribe da podnese nevjerovatna kolebanja temperature, u rasponu od 15 do 30 °C, svojstvene su još samo zlatnim karasima. Nije zahtjevna ni po pitanju hemizma vode. Vrlo su temperamentne i živahne ribe, pa traže dosta prostora za plivanje, ali i dosta prostora za skrivanje u bilju. Zbog navike da iskaču iz vode u potrazi za insektima, akvarijum mora biti zatvoren poklopcem. Njenom temperamentu odgovara i veliki apetit - zebrice će prihvatati svu kupovnu hranu i svu živu koja im može stati u usta, uključujući razne crviće i kuhano zeljasto povrće.
Kada je u pitanju razmnožavanje, zebrice ne zahtjevaju ništa osim krupnijeg šljunka ili, još bolje, mrežice dovoljno široke da kroz nju propadne ikra, a istovremeno dovoljno uske da spriječi roditelje da dopru do nje i pojedu je. Sa lakoćom se mrijeste i u posudama vrlo malih zapremina, od 5 do 10 l. Hemizam vode ne igra važnu ulogu, ali mrijest potiče hladna, svježa voda bogata kisikom. Ženka položi 100 do 400 komada ikre, nakon čega se roditelji izdvajaju iz akvarijuma. Inkubacija ikre pri temperaturi od 26 °C traje samo 24 sata. Nakon izleganja ličinke vise tri dana na staklu ili podlozi, a zatim proplivaju i počinju se hraniti. Kao prvu hranu za mladunce može se koristiti tvrdo kuhano žumance. Kod žumanceta treba biti oprezan i ne stavljati previše, jer se brzo raspada, zagađuje vodu i oduzima dragocjeni kisik.
Zebrice se smatraju najjednostavnijim početničkim ribama. Većina akvarista, kada želi krenuti sa mrijestom ikrašica, počinje upravo od njih. Do danas je odgojeno nekoliko varijeteta zebrica, od kojih neke ispoljavaju zeleni, žuti ili crveni fluoroscentni protein. Susreću se varijeteti zlatne boje i varijacije koje se odlikuju tačkicama kao kod leoparda, te albino forme zebrice. Varijeteti sa leopardovim uzorkom se ponekad označavaju kao zasebna vrsta po imenu Danio frankei.
சிற்றின குறிப்பு
வரிக்குதிரை மீன் அல்லது ஜீப்ரா பிஸ் (டேனியோ ரியோ ) என்பது சைப்ரினிஃபார்ம்ஸ் வரிசையில் மினோ குடும்பத்தைச் சார்ந்த ( சைப்ரினிடே ) நன்னீரீல் வாழக்கூடிய மீன் வகையாகும் . [2] தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன் மிக பிரபலமானதாகும். இம்மீனாது பரவலாக ஜீப்ரா டேனியோ [3] என்ற வர்த்தக பெயரில் விற்கப்படுகிறது. இம்மானனது வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலங்கள் பகுதிகளில் காணப்பட்டாலும் " வெப்பமண்டல மீன்" என்று அறியப்படுகிறது. வரிக்குதிரை மீனானது அறிவியல் ஆய்வுகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் முதுகெலும்பு மாதிரி உயிரினமாகும். குறிப்பாக புதிய மருந்து உருவாக்கம், ஒரு மருந்தானது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான முன் பயன்பாட்டுச் சோதனைகளில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இம்மீனின் மீளுருவாக்கம் திறன் இங்கு குறிப்பிடத்தக்கதாகும், மேலும் உயிரிதொழில்நுட்ப ஆய்வாளர்கள் மரபணு மாற்றப்பட்ட வகைகளை உருவாக்கியுள்ளனர் [4] [5]
வரிக்குதிரை மீன் (ஜீப்ராஃபிஷ்) என்பது சைப்ரினிடே குடும்பத்தின் பிராச்சிடானியோ பேரினத்தைச் சார்ந்த ஒரு உறுப்பினர். இது டானியோ அஸ்குலாபியுடன் ஒரு சகோதர-குழு உறவைக் கொண்டுள்ளது. உயிரினங்களின் பைலோஜெனடிக் மரத்தால் நிரூபிக்கப்பட்டபடி, ஜீப்ராஃபிஷ் தேவாரியோ இனத்துடன் நெருங்கிய தொடர்புடையது. வரிக்குதிரைமீன் என்பது பெரும்பாலும் "டேனியோ ரியோ"வை [6], குறிக்கின்றது, ஆனால் சமீபகால மூலக்கூறு ஆய்வுகள் இதனை "பிராச்சிடானியோ ரியோ" என வகைப்பாடு செய்து பிராச்சிடானியோ பேரினத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படும் வரிக்குதிரை மீன் தெற்காசியாவில் உள்ள நன்னீர் வாழ்விடங்களை பூர்வீகமாக கொண்டது. [1] [7] [8] வடக்கு எல்லையான தென் இமயமலையில், பாகிஸ்தான்-இந்தியா எல்லைப் பகுதியில் உள்ள சட்லெஜ் நதிப் படுகை முதல் வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வரை உள்ளது. இதன் பரவலானது கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிப் படுகைகளில் காணப்படுகிறது. இந்த மீனினமானது முதன் முதலில் இந்தியாவின் கோசி நதி (கீழ் கங்கைப் படுகை) யிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து இங்கும் அங்குமாக தொடர்ச்சியற்ற பரவலாக உள்ளது. [9] இது மியான்மரில் (பர்மா) அடிக்கடி காணப்பட்டதாக கூறப்படுகிறது என்றாலும், இச்செய்தியானது முற்றிலும் பழைய பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது (1926 ஆண்டிற்கு முந்தயன) மற்றும் இது பின்னர் விவரிக்கப்பட்ட இதன் நெருங்கிய உறவினரான குறிப்பாக டானியோ கயாத்தித் தொடர்புடையாதக உள்ளது . [10] [11] அதேபோல், இலங்கையின் பழைய பதிவுகள் மிகவும் கேள்விக்குரியவை மற்றும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதாக இல்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா, கனெக்டிகட், புளோரிடா மற்றும் நியூ மெக்ஸிகோவிற்கு வரிக்குதிரை மீனானது அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீன்அருங்காட்சியக பயன்பாட்டிற்காக மீன்வளர்ப்பவர்களால் விடுவிக்கப்பட்டதாகவோ அல்லது மீன் பண்ணைகளிலிருந்து தப்பித்ததன் மூலமாகவோ இருக்கலாம். ஆனால் 2003 ஆம் ஆண்டில் நியூ மெக்ஸிகோவில் காணப்பட்ட வரிக்குதிரை மீன்கள் அழிக்கப்பட்டதாக பதிவுகள் கூறினாலும், மற்றமீன்கள் தப்பி பிழைத்தன குறித்து தெளிவாகத் தெரியவில்லை. [12] மற்ற இடங்களான கொலம்பியா மற்றும் மலேசியாவிலும் இந்த இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. [2] [8]
வரிக்குதிரை மீன் பொதுவாக நீரோடைகள், கால்வாய்கள், சிறுபள்ளங்கள், ஆக்ஸ்போ ஏரிகள், குளங்கள் மற்றும் நெல் வளரிடம் போன்ற ஆழமற்ற பகுதியில் தேங்கி நிற்கும் தெளிவான நீரில் வாழ்கின்றது. [2] [13] [14] [15]. இப்பகுதிகளில் பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும் தாவரங்களும், அவை நீரில் மூழ்கியோ அல்லது கரைகளில் இருந்து படர்பவையாக உள்ளன. இந்நீர் நிலைகளின் அடிப்பகுதியானது மணல், சேறு நிறைந்த பகுதிகளாக, மெல்லிய கூழாங்கற்கள் அல்லது சரளைகள் நிறைந்த பகுதியாக உள்ளன. பங்களாதேஷ் மற்றும் இந்திய பெரும்பகுதி முழுவதும் வரிக்குதிரை மீனின் பரவலின் அடிப்படையில் இவை வாழும் வாழிட நீரின் கார அமிலத்தனமையானது ஓரளவு நடுநிலையாகவும், வெப்பநிலையானது பெரும்பாலும் 16.5 லிருந்து 34 டிகிரி செண்டிகிரேடாகவும் உள்ளது. [16] வழக்கத்திற்கு மாறாக 12.3 டிகிரி செண்டிகிரேடு குளிர்ப்பகுதியிலும், 38.6 டிகிரி செண்டிகிரேடு வெப்பப்பகுதியிலும் காணப்பட்ட வரிக்குதிரை மீன், இத்தகைய பகுதியிலும் சாதாரணமாகவே வாழ்கின்றன. வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த வெப்பநிலை நிலவும் கடல் மட்டத்திலிருந்து 1,576 மீ மற்றும் 1,795 மீ உயர்ந்த இடங்களிலும் வரிக்குதிரை மீன்கள் வாழிடமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
வரிக்குதிரை மீன் என்ற பெயரானது இம்மீனின் உடலின் ஐந்து சீரான, கிடைமட்ட, நீல நிற கோடுகள் வரிக்குதிரையின வரிகளை நினைவூட்டுவதால் சூட்டப்பட்டது, மேலும் இந்த வரிகள் வால் துடுப்பின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த மீனின் வடிவமானது முன் பின் பகுதிகளில் குறுகி பக்கவாட்டில் சுருக்கி காணப்படுகிறது. இம்மீன் வாயானது மேல்நோக்கி இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண் மீனது டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டு வடிவிலானது. நீல நிற கோடுகளுக்கு இடையில் தங்கக் நிறக்கோடுகள் உள்ளன. பெண் மீனானது பெரிய, வெண்மையான வயிற்றுப் பகுதியினையும், தங்கநிற கோடுகளுக்குப் பதிலாக வெள்ளி கோடுகள் உள்ளன. முதிர்வடைந்த பெண் மீனில் மலப்புழைத் துடுப்பிற்கு முன்னால் ஒரு சிறிய இனப்பெருக்க அரும்பு காணப்படுகிறது. வரிக்குதிரை மீனானது 4 முதல் 5 செமீ நீளம் வரை வளரும் தன்மையுடையது,[11] இருப்பினும் இவற்றின் நீளம் பொதுவாக 1.8–3.7 செமீ வரை காணப்படுகின்றன. வாழிடத்தினைப் பொறுத்து மீனின் நீளத்தில் சில மாறுபாடுகளுடன் காணப்படும். பொதுவாக முறைப்படுத்தப்பட்ட வாழிடச் சூழலில் இம்மீனின் ஆயுட்காலம் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும், இருப்பினும் சிறந்த சூழலில் வாழும் போது இது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படலாம். பொதுவாக இயற்சூழலில் ஒரு வருடம் மட்டுமே வாழும் இனமாக அறியப்படுகிறது. [1]
2015 ஆம் ஆண்டில், நிகழ்வு நினைவாற்றல் திறன் குறித்து வரிக்குதிரை மீனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. வாழிடச் சூழ்நிலையில், பொருள்கள், இருப்பிடங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் (என்ன, எப்போது, எங்கே) போன்ற நிலைகளை நினைவில் வைக்கும் திறனை வரிக்குதிரை மீன் கொண்டிருப்பது அறியப்பட்டது. எபிசோடிக் நினைவகம் என்பது வெளிப்படையான நினைவக அமைப்புகளின் திறன் ஆகும், இது பொதுவாக அனுபவ உணர்நிலையுடன் தொடர்புடையது . [17]
டேனியோ ரியோவின் தலைமுறை காலம் சராசரியாக மூன்று மாதங்கள் ஆகும். அண்டவிடல் மற்றும் சினைவிடல் ஏற்பட ஒரு ஆண் மீன் துணை இருக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் பெண் மீன்கள் திரள் திரளாக நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. முட்டையிடப்பட்டவுடன் கரு வளர்ச்சி தொடங்குகிறது; விந்தணு இல்லாததால், ஓரிரு செல் பிரிவுகளுக்குப் பிறகு வளர்ச்சி நிறுத்தப்படும். கருவுற்ற முட்டைகள் உடனடியாக ஒளிஊடுரும் தன்மையுடையதாக மாறுகின்றன. இப்பண்பானது டே. ரியோவை ஆய்விற்கு ஏற்ற மாதிரி இனமாக மாற்றுகிறது.
வரிக்குதிரை மீனில் கருவளர்ச்சியானது வேகமாக நிகழ்வதால், கருத்தரித்த 36 மணி நேரத்திற்குள் அனைத்து முக்கிய உறுப்புகளும் தோன்றுகின்றன. கருவானது கருவுணவு மேல் ஒரு பெரிய செல்லாக தொடங்குகிறது (படம், 0 மணி நேரம், பார்க்கவும்), இது இரண்டு இரண்டாக பிரிந்து (0.75 மணி நேரம்) பிரிகிறது, இதனால் ஆயிரக்கணக்கான சிறிய செல்கள் (3.25 மணி நேரம்) தோன்றுகின்றன. செல்கள் கருவுணவு பக்கம் (8 மணி நேரம்) இடம்பெயர்ந்து தலை மற்றும் வால் (16 மணி நேரம்) உருவாகத் தொடங்குகின்றன. பின்னர் வால் வளர்ந்து உடலில் இருந்து பிரிக்கிறது (24 மணி நேரம். முதல் சில நாட்களில் (72 மணி நேரம்) முதிர்ச்சியடையும் போது மீன் கருவுணவினைப் பயன்படுத்துவதால், கருவானது காலப்போக்கில் சுருங்குகிறது. சில மாதங்களுக்குப் பிறகு, வளர்ச்சியடைந்த மீன் இனப்பெருக்க முதிர்ச்சிஅடைகிறது.
மீன்வளர்ப்பில் சினைவிடுதலை ஊக்குவிக்க, சில ஆராய்ச்சியாளர்கள் மீன் தொட்டியின் அடிப்பகுதியில் சாய்வான அமைப்பினை பொருத்துகின்றனர். இது ஆற்றின் அடிப்பகுதியினை உருவகப்படுத்துவதாக அமைகிறது. மேலும் இது தொட்டியின் ஆழத்தினைக் குறைக்கிறது. வரிக்குதிரை மீனானது சர்க்காடியன் ரிதம் எனப்படும் நாள்சாரி சீரியக்கத்தின் காரணமாக காலையில் சினைவிடுதலை மேற்கொள்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி 10 நிமிடங்களில் 10,000 கருக்களை சேகரிக்கின்றனர். ஆண் வரிக்குதிரை மீனானது பெண் மீனின் மீது காணப்படும் கோடுகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்து புணர்வதாக அறியப்பட்டாலும், கூட்டமாக பெண் மீன்கள் காணப்படும் போது இத்தகைய தேர்வினை மேற்கொள்ளாமல் பெண் மீன்களுடன் இணை சேர்கின்றன. பெண்களை ஈர்க்கும் விஷயங்கள் தற்போது முழுவதும் புலனாகவில்லை. நீர்காட்ட்சித் தொட்டிகளில் காணப்படும் தாவரங்கள் சினைவிடுதலை ஊக்குவிக்கிறது. நெகிழித் தாவரங்கள் கூட இச்செயலை செய்வதாக அறியப்படுகிறது
நெகிழியில் காணப்படும் செறிவூட்டப்பட்ட டை சோனைல் தாலேட் மீன் வாழிடச்சூழலை மாசுபடுத்துவதால், இம்மீனின் இனப்பெருக்க கார்மோன்களை பாதிப்பதால், இனப்பெருக்க செயல்பாட்டினை பாதிக்கின்றது. இந்த விளைவில் ஆண் பெண் மீன்களிடையா தாக்கம் வேறுபாடுடன் காணப்படுகின்றது. [18]
வரிக்குதிரை மீன் அனைத்துண்ணி, வகையைச் சார்ந்ததாகும். இவற்றின் முதன்மையாக உணவாக விலங்கு மிதவை உயிரிகளும், தாவர மிதவை உயிரிகளும், பூச்சிகள் மற்றும் பூச்சிகளின் இளம் உயிர்களும் உள்ளன. இருப்பினும் புழுக்கள் மற்றும் சிறிய ஓடுடைய கணுக்காலிகளை இதன் விருப்ப உணவு உடனடியாக கிடைக்காத காலங்களில் உண்ணுகின்றன. [15]
ஆய்வகங்களில் முதிர்வடைந்த வரிக்குதிரை மீன்களுக்கு ஆர்டிமியா எனப்படும் உப்பு இறால் அல்லது பரமேசியாவால் வழங்கப்படுகிது . [19]
வரிக்குதிரைமீனானது இயற்வேதி காரணிகளை தாங்கி வளரக்கூடிய மீனாகையால், தொடக்கநிலை நீர்வாழ் வளர்ப்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. வரிக்குதிரை மீனின் அழகு, அவற்றின் விளையாட்டுத்தனம் , விரைவான இனப்பெருக்கம், குறைவான விலை காரணமாக் இம்மீன்கள் பரவலாக கிடைக்கின்றன. கூட்டமாக காணப்படும் இம்மீன்கள் இதர மீன்களுடன் நன்றாக தொடர்பு கொள்கின்றன. எனினும். இம்மீன்கள் ஓடினியம் அல்லது வெல்வெட் நோய், மைக்ரோஸ்போரிடியா (சூடோலோமா நியுரோபிலா), மற்றும் மைக்ரோபாக்டீரியம் பாக்டீரிய இனங்களால் பாதிப்படைகின்றன. பெரிய மீன்கள் இளம் குஞ்சுகளை சாப்பிடுவதால், இனக்குழுக்களை வலை, இனப்பெருக்க பெட்டி அல்லது தனி தொட்டியினைப் பயன்படுத்தி பிரிப்பதன் மூலம் பாதுகாக்கலாம். இயற் வாழிடச்சூழலில் வரிக்குதிரை மீன் சுமார் நாற்பத்திரண்டு மாதங்கள் வாழ்கிறது. இச்சூழலில் ஒருசில மீன்களில் வளைந்த முதுகெலும்பை உருவாகிறது. [20]
வரிக்குதிரை டேனியோ மரபணு மாற்றப்பட்ட மீன்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது மற்றும் முதன்முதலாக வணிக ரீதியாக விற்பனைக்கு வந்த இனமாக குளோஃபிஷ் (ஒளிரும் வண்ண மீன்) உள்ளது.
2003 இன் பிற்பகுதியில், பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஒளிரும் புரதங்களை வெளிப்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட வரிக்குதிரை மீன் வணிக ரீதியாகக் விற்பனைக்கு வந்தன. இத்தகைய ஒளிரும் நிறமுடைய மீன்கள் குளோஃபிஷ் என வர்த்தகரீதியாக பெயரிடப்பட்டன. வளர்ப்பில் உள்ள பிற வகைகளாக "தங்கம்", "மணல்", "நீண்ட துடுப்பு" மற்றும் "சிறுத்தை" முதலியன அடங்கும்.
முன்பு டேனியோ பிரான்கி என அறியப்பட்ட சிறுத்தை டேனியோ புள்ளிகளுடன் கூடிய நிறம் தோற்றரு நிறமி பிறழ்வு காரணமாக ஏற்பட்ட வரிக்குதிரை மீனாகும். [21] மீன் அருங்காட்சியக வர்த்தக நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்த இனக்கலப்பின் மூலம், வரிக்குதிரை மற்றும் சிறுத்தை வடிவத்தின் மஞ்சள் நிற சாந்திஸ்டிக் வடிவங்கள் பெறப்பட்டுள்ளன.
மரபணு மாற்றம் மற்றும் திடீர்மாற்ற முறையில் தோற்றுவிக்கப்பட்ட வரிக்குதிரை மீனின் பல்வேறு வகைகள் சீனா ஜீப்ராஃபிஷ் வள மையத்தில் (CZRC) சேமிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பானது சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சீன அறிவியல் கல்விக்குழுமத்தினால் கூட்டாக ஆரம்பிக்கப்பட்டது.
ஜீப்ரா மீன் தகவல் வலையமைப்பு ( ZFIN ) யில் பட்டியலிடப்பட்டுள்ள டே ரெரிரோ வில் தற்போதுவரை அறியப்பட்ட இயற்-வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.[22]
டேனியீ இனங்களிடையே கலப்புச் செய்து பெறப்பட்ட மீன்கள் இனப்பெருக்க தன்மையுடையுதாக உள்ளன. எடுத்துக்காட்டாக டேனியோ ரேரியோ இனத்திற்கும் டேனியோ நைக்ரோபேசியாட்டஸ் இனத்திற்கு இடையே கலப்புச் செய்யப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட இனம். [23]
டே. ரியோ என்பது முதுகெலும்பு வளர்ச்சி மற்றும் மரபணு செயல்பாடு பற்றிய ஆய்வுகளுக்கான பொதுவான மற்றும் பயனுள்ள அறிவியல் மாதிரி உயிரினமாகும் ஒரு ஆய்வக விலங்காக அதன் பயன்பாட்டின் முன்னோடி ஆய்வு அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஜார்ஜ் ஸ்ட்ரைசிங்கர் மற்றும் அவரது சகாக்கள் 1970 மற்றும் 1980 களில் ஒரேகான் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ட்ரைசிங்கர்ன் வரிக்குதிரை மீன் நகல் முதன்முதலாக வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட முதுகெலும்பு உயிரி நகலாகும். [24] இதன் முக்கியத்துவம் பெரிய அளவிலான முன்னோக்கிய மரபணு தேர்ந்தெடுப்பில் பயன்படுகிறது. ஜீப்ராஃபிஷ் தகவல் வலையமைப்பு (ZFIN) என்ற பிரத்யேக நிகழ்நிலை (ஆன்லைன்) தரவுத்தளத்தில் இம்மீன் குறித்த மரபணு, வளர்ச்சி தரவுகள் உள்ளன. ஜீப்ராஃபிஷ் சர்வதேச வள மையம் (ZIRC) என்பது ஒரு வரிக்குதிரை குறித்த மரபணு வளர் களஞ்சியமாகும். இதில் 29,250 இணைமரபணுக்கள் (அல்லீல்கள்) ஆராய்ச்சி சமூகத்திற்கு கிடைக்கிறது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சில மீன் வகைகளில் டே. ரியோவும் ஒன்றாகும்.
டே. ரியோவுடனான ஆராய்ச்சி வளர்ச்சி உயிரியலில், புற்றுநோயியல், நச்சுயியல், இனப்பெருக்க ஆய்வுகள், பேரூரு அறிவியல்(டெரடாலஜி), மரபியல், நரம்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், தண்டு செல் ஆராய்ச்சி, மீளுருவாக்க மருத்துவம், தசைசிதைவு நோய் பரிணாமக் கோட்பாடு . முதலிய துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. [25]
ஒரு மாதிரி உயிரி அமைப்பாக, வரிக்குதிரை மீன் விஞ்ஞானிகளுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. இதன் மரபணு முழுமையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது நன்கு புரிந்து கொள்ளப்பட்ட, எளிதில் கவனிக்கக்கூடிய மற்றும் சோதனைக்குரிய வளர்ச்சி நடத்தைகளைக் கொண்டுள்ளது. வேகமான கரு வளர்ச்சி, ஒப்பீட்டளவில் பெரிய கரு, வலுவான ஒளி ஊடுருவக்கூடியவையானது. மேலும் கருவானது, கருப்பைக்கு வெளியே எளிதில் வளரக்கூடியவையாகவும் உள்ளது.[26] மேலும், நன்கு அறியப்பட்ட திடீர்மாற்ற முறையில் தோற்றுவிக்கப்பட்ட மீன்களும் நடைமுறையில் கிடைக்கின்றன.
சாயமேற்றல் (உயிரியல்) தொழில்நுட்பங்களின் உதவியால், ஆரம்பகால வளர்ச்சியின் போது இதன் இரு செல் கருவை இணைத்து ஒரு செல் கருவாக ஒரு ஹோமோசைகஸ் கருவை உருவாக்கலாம். இது ஒரு முன்னோடி ஆய்வாக கருதப்படுகிறது. வரிக்குதிரை மீனின் ஒரு சில பண்புகள் பாலூட்டிகளின் பண்புகளை, குறிப்பாக நச்சுத்தன்மை சோதனை, பாலூட்டிகளின் தூக்க நடத்தையுடன் ஒத்துப் போவதால், மனித குலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்விற்கு இம்மீன் உறுதுணையாக மாதிரியாக உள்ளது. [27] பொதுவான உணவு இம்மீன்களுக்கு இல்லாததால் உலகளவில் சிறந்த ஆராய்ச்சி மாதிரி வரிக்குதிரை மீனைப் பயன்படுத்த இயலவில்லை. [28] மேலும் மனித கோளாறுகள் தொடர்பான சில மரபணுக்களில் வரிக்குதிரை மீனுக்கும் பாலூட்டிகளுக்கும் இடையில் சிறிய ஆனால் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. [29] [30]
இது மாதிரி மற்றும் தத்துவ ஆய்வுகளில் இதன் எளிய வடிவம் காரணமாக பயன்பாட்டில் உள்ளது (VEGFC உள்ள lymphangiogenesis).[31]
வரிக்குதிரை மீனின் இளம் உயிரிகளில் இதயம் மற்றும் பக்கவாட்டு கோடு முடி செல்களை மீண்டும் உருவாக்கும் திறன் கொண்டது. 2011 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் ஒரு விளம்பர பிரச்சாரத்தை நடத்தியது. இதன் நோக்கமானது மனிதர்களில் இந்த திறனை பொருந்தக்கூடியதாக மாற்றி அமைப்பதாகும். இதன் மூலம் ஆராய்ச்சி நிதியாக சுமார் 50 மில்லியன் பவுண்டினை திரட்டுவதாகும். [32] [33]
ஒளிஉணர் செல்கள் மற்றும் விழித்திரை நியூரான்களில் பாதிப்பு ஏற்படும் போதுமுல்லர் க்ளியாவில் நிகழும் மாறுபாடடைதல் மற்றும் பெருக்கத்தால் சரிசெய்யப்படுகிறது. [34] ஆராய்ச்சியாளர்கள் திடீர்மாற்றத்தினை சோதிக்க முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வால் துடுப்பினை அடிக்கடி வெட்டி எடுத்து அதன் மூலம் ஏற்படும் மறுவளர்ச்சியினை சோதித்தனர். வரிக்குதிரை மினில் திசுநீக்கப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் தண்டு செல் போன்ற நிலைக்கு மாற அவ்விடத்தில் ஹிஸ்டோன் டிமெதிலேஷன் ஏற்படுவது கண்டறியப்பட்டது. [35] 2012 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வின் முடிவில், வரிக்குதிரை மீன்கள் ஃபைப்ரோபிளாஸ்ட் வளர்ச்சி காரணி என அழைக்கப்படும் ஒரு சிறப்பு புரதத்தைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இப்புரதம் முதுகெலும்பு காயத்திற்குப் பிறகு பளபளப்பான வடு இல்லாமல் குணமடைவதை உறுதிசெய்கின்றன. [36] கூடுதலாக, பின்புற பக்கவாட்டு கோட்டின் மயிர் செல்களளின் சேதம் அல்லது வளர்ச்சி சீர்குலைவை மீண்டும் உருவாக்குகின்றன. [37] [38] மீளுருவாக்கத்தின் போது மரபணு வெளிப்பாட்டின் ஆய்வு, இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பல முக்கியமான சமிக்ஞை பாதைகளை அடையாளம் காண வாய்ப்பாக உள்ளது. (அதாவது Wnt சமிக்ஞை மற்றும் ஃபைப்ரோபிளாஸ்ட் வளர்ச்சி காரணி). [39]
நரம்பியக்கடத்தல் நோய்கள், இயக்கக் கோளாறுகள், மனநலக் கோளாறுகள் மற்றும் காது கேளாமை உள்ளிட்ட நரம்பு மண்டலத்தின் கோளாறுகளை ஆராய்வதில், ஆராய்ச்சியாளர்கள் வரிக்குதிரை மீன்களைப் பயன்படுத்தி, இந்த நிலைகளின் அடிப்படை மரபணு குறைபாடுகளில் மனித மூளை, முதுகெலும்பு மற்றும் உணர்ச்சி உறுப்புகளில் அசாதாரண செயல்பாடு ஆராயப்பட்டது. மனித தசைக்கூட்டு நோய்களான தசைநார் சிதைவு போன்ற சிக்கல்களின் புதிய நுண்ணறிவினைப்பெற ஆராய்ச்சியாளர்கள் வரிக்குதிரை மீன்களைப் பயன்படுத்துகின்றனர். [40] மேலும் வரிக்குதிரை மீனில், பலவகையான மனித புற்றுநோய்களுக்கு அடித்தளமாக இருக்கும் உயிரியல் சமிக்ஞையான ஹெட்ஜ்ஹாக் என்ற மரபணுவின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகிறது.
வரிக்குதிரை மீனின் குறுகி வாழ்க்கைச் சுழற்சி காலம், ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கரு முட்டை வெளியீடு காரணமாக டே. ரியோ வினை மரபணு ஆய்வுகளுக்கு ஒரு பயனுள்ள மாதிரியாக தேர்ந்தெடுக்க வழிவகுத்துள்ளது. ஒரு பொதுவான பின்னோக்கிய மரபியல் நுட்பம், மரபணு வெளிப்பாட்டைக் குறைப்பது அல்லது மார்போலினோ எதிருணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளவுகளை மாற்றுவது. மோர்போலினோ ஒலிகோணுக்ளியோடைடுகள் (MO) நிலையானவை, டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ போன்ற அதே தளங்களைக் கொண்ட செயற்கை மேக்ரோமிகுலூல்கள் ; நிரப்பு ஆர்.என்.ஏ காட்சிகளுடன் பிணைப்பதன் மூலம், அவை குறிப்பிட்ட மரபணுக்களின் வெளிப்பாட்டைக் குறைக்கலாம் அல்லது ஆர்.என்.ஏவில் பிற செயல்முறைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். 32 செல் கட்டத்திற்குப் பிறகு ஒரு கருவின் ஒரு கலத்தில் MO செலுத்தப்படலாம், அந்த கலத்திலிருந்து வந்த கலங்களில் மட்டுமே மரபணு வெளிப்பாட்டைக் குறைக்கிறது. இருப்பினும், ஆரம்பகால கருவில் உள்ள செல்கள் (32 க்கும் குறைவான செல்கள்) பெரிய மூலக்கூறுகளுக்கு ஒன்றிணைக்கக்கூடியவை, [41] [42] செல்கள் இடையே பரவலை அனுமதிக்கிறது. ஜீப்ராஃபிஷில் மோர்போலினோஸைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் பொருத்தமான கட்டுப்பாட்டு உத்திகளை விவரிக்கின்றன. [43] ஒன்று அல்லது இரு கரு செல் நிலையில் 500 பிகோ லிட்டர் மோர்போலினோஸ் செலுத்தப்படுகிறது. மோர்போலினோ கருவின் பெரும்பாலான செல்களை ஒருங்கிணைக்க முடிகிறது. [44]
ஜீப்ராஃபிஷில் மரபணுக்களின் செயல்பாட்டைப் படிப்பதற்கான ஒரு பிரபலமான அணுகுமுறையே டிரான்ஸ்ஜெனெஸிஸ் ஆகும். டோல் 2 டிரான்ஸ்போசன் முறையைப் பயன்படுத்தி ஒரு முறையால் டிரான்ஸ்ஜெனிக் ஜீப்ராஃபிஷை உருவாக்குவது எளிதானது. [45]
மெலனோமா, லுகேமியா, கணைய புற்றுநோய் மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா உள்ளிட்ட புற்றுநோய் ஆராய்ச்சிக்கான மரபணு மாற்ற உயிரியாக பல வகையான மரபணு மாற்றப்பட்ட வரிக்குதிரை மீனினங்கள் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளன. . [46] [47] ஜீப்ரா பிறழ்வுக்குள்ளான BRAF அல்லது NRAS எந்தவொருவரின் வடிவங்களையே குறிப்பிடும் ஆன்கோஜீன்களின் ஒரு பி 53 குறைபாடு பின்னணி மீது வைக்கப்படும் போது மெலனோமா உருவாக்க. வரலாற்று ரீதியாக, இந்த கட்டிகள் மனித நோயை வலுவாக ஒத்திருக்கின்றன, முழுமையாக இடமாற்றம் செய்யக்கூடியவை, மற்றும் பெரிய அளவிலான மரபணு மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. BRAF மெலனோமா மாதிரி நேச்சர் இதழில் மார்ச் 2011 இல் வெளியிடப்பட்ட இரண்டு திரைகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டது. ஒரு ஆய்வில், மனித மெலனோமாவில் பெருக்கப்பட்டு அதிகமாக வெளிப்படுத்தப்படும் மரபணுக்களின் செயல்பாட்டு முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு கருவியாக இந்த மாதிரி பயன்படுத்தப்பட்டது. [48] ஒரு மரபணு, SETDB1, ஜீப்ராஃபிஷ் அமைப்பில் கட்டி உருவாவதை குறிப்பிடத்தக்க வகையில் துரிதப்படுத்தியது, இது ஒரு புதிய மெலனோமா ஆன்கோஜீனாக அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது. இது குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஏனெனில் SETDB1 எபிஜெனெடிக் ஒழுங்குமுறையில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது, இது கட்டி உயிரணு உயிரியலுக்கு மையமாக இருப்பதைப் பாராட்டுகிறது.
மற்றொரு ஆய்வில், ஒரு வேதியியல் ஸ்கிரீனிங் அணுகுமுறையைப் பயன்படுத்தி கட்டியின் தோற்றம் நரம்பியல் முகடு கலத்தில் இருக்கும் மரபணு நிரலை சிகிச்சை முறையில் குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. [49] DHODH புரதத்தின் (லெஃப்ளூனோமைடு எனப்படும் ஒரு சிறிய மூலக்கூறு மூலம்) ஒரு தடுப்பு நரம்பியல் முகடு ஸ்டெம் செல்களை உருவாக்குவதைத் தடுத்தது, இது இறுதியில் டிரான்ஸ்கிரிப்ஷனல் நீட்டிப்பு செயல்முறையில் தலையிடுவதன் மூலம் மெலனோமாவை உருவாக்குகிறது. இந்த அணுகுமுறை ஒற்றை மரபணு மாற்றத்தை விட மெலனோமா கலத்தின் "அடையாளத்தை" குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், லெஃப்ளூனோமைடு மனித மெலனோமாவுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்பாட்டைக் கொண்டிருக்கலாம். [50]
இருதய ஆராய்ச்சியில், இரத்த உறைவு, இரத்த நாளங்களின் வளர்ச்சி, இதய செயலிழப்பு மற்றும் பிறவி இதயம் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட ஆய்வுகளில் வரிக்குதிரை மீன் பயன்படுத்தப்படுகிறது. [51]
கடுமையான அழற்சி பற்றிய ஆராய்ச்சியின் திட்டங்களில், பல நோய்களில் ஒரு முக்கிய அடிப்படை செயல்முறை, ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஜீப்ராஃபிஷ் மாதிரியின் அழற்சியின் மாதிரியை நிறுவியுள்ளனர், மேலும் அதன் தீர்மானமும். இந்த அணுகுமுறை வீக்கத்தின் மரபணு கட்டுப்பாடுகள் மற்றும் புதிய மருந்துகளை அடையாளம் காணும் சாத்தியம் பற்றிய விரிவான ஆய்வை அனுமதிக்கிறது. [52]
தசைநார் டிஸ்டிரோபிஸ் (எம்.டி) என்பது தசை பலவீனம், அசாதாரண சுருக்கங்கள் மற்றும் தசை விரையத்தை ஏற்படுத்தும் மரபணு கோளாறுகளின் ஒரு பன்முகத்தன்மை கொண்ட குழு ஆகும், இது பெரும்பாலும் முன்கூட்டிய மரணத்திற்கு வழிவகுக்கிறது. ஜீப்ராஃபிஷ் தசைநார் டிஸ்டிரோபிகளைப் படிக்க மாதிரி உயிரினமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [53] எடுத்துக்காட்டாக, சாப்ஜே ( சாப் ) விகாரி என்பது மனித டுச்சேன் தசைநார் டிஸ்டிராபியின் (டி.எம்.டி) ஜீப்ராஃபிஷ் ஆர்தோலோக் ஆகும். [54] மயூகோனிக் டிஸ்ட்ரோபி வகை 1 (டிஎம் 1) நோய்க்கிரும வளர்ச்சியில், மாற்று பிளவுபடுத்தும் காரணியான எம்பிஎன்எல்லின் பங்கை தீர்மானிக்க மச்சுக்கா-டிஸிலி மற்றும் சக ஊழியர்கள் ஜீப்ராஃபிஷைப் பயன்படுத்தினர். [55] மிக சமீபத்தில், டாட் மற்றும் பலர். டி.எம் 1 நோயின் ஆரம்ப வளர்ச்சியின் போது சி.யு.ஜி மீண்டும் வெளிப்பாட்டின் தாக்கத்தை ஆராய வடிவமைக்கப்பட்ட புதிய ஜீப்ராஃபிஷ் மாதிரியை விவரித்தார். [56] மனித லேமினின் α2 (LAMA2) மரபணுவில் பிறழ்வால் ஏற்படும் சிஎம்டி வகை 1 ஏ (சிஎம்டி 1 ஏ) உள்ளிட்ட பிறவி தசைநார் டிஸ்டிராபிகளைப் படிப்பதற்கான ஒரு சிறந்த விலங்கு மாதிரியும் ஜீப்ராஃபிஷ் ஆகும். [57] ஜீப்ராஃபிஷ், மேலே விவாதிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் குறிப்பாக ரசாயனங்களை உறிஞ்சுவதற்கான ஜீப்ராஃபிஷ் கருக்களின் திறன் ஆகியவற்றின் காரணமாக, தசைநார் சிதைவுகளுக்கு எதிராக புதிய மருந்துகளைத் திரையிடுவதிலும் சோதனை செய்வதிலும் ஒரு தேர்வு மாதிரியாக மாறியுள்ளது. [58]
சிற்றின குறிப்பு
வரிக்குதிரை மீன் அல்லது ஜீப்ரா பிஸ் (டேனியோ ரியோ ) என்பது சைப்ரினிஃபார்ம்ஸ் வரிசையில் மினோ குடும்பத்தைச் சார்ந்த ( சைப்ரினிடே ) நன்னீரீல் வாழக்கூடிய மீன் வகையாகும் . தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன் மிக பிரபலமானதாகும். இம்மீனாது பரவலாக ஜீப்ரா டேனியோ என்ற வர்த்தக பெயரில் விற்கப்படுகிறது. இம்மானனது வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலங்கள் பகுதிகளில் காணப்பட்டாலும் " வெப்பமண்டல மீன்" என்று அறியப்படுகிறது. வரிக்குதிரை மீனானது அறிவியல் ஆய்வுகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் முதுகெலும்பு மாதிரி உயிரினமாகும். குறிப்பாக புதிய மருந்து உருவாக்கம், ஒரு மருந்தானது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான முன் பயன்பாட்டுச் சோதனைகளில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இம்மீனின் மீளுருவாக்கம் திறன் இங்கு குறிப்பிடத்தக்கதாகும், மேலும் உயிரிதொழில்நுட்ப ஆய்வாளர்கள் மரபணு மாற்றப்பட்ட வகைகளை உருவாக்கியுள்ளனர்