dcsimg
Plancia ëd Psathyrella aquatica J. L. Frank, Coffan & D. Southw. 2010
Life » » Fungi » » Basidiomycota » » Psathyrellaceae »

Psathyrella aquatica J. L. Frank, Coffan & D. Southw. 2010

நீரடிக் காளான் ( tamil )

fornì da wikipedia emerging languages

நீரடிக் காளான் அல்லது ரோக் காளான் (ஆங்கிலம்: Rogue mushroom, Underwater Mushroom ; இலத்தின்: Psathyrella aquatica ) ஒரு பூஞ்சைக் காளான் வகையாகும், இதுவரை அறியப்பட்ட காளான் இனங்களில் நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு இனம் இதுவேயாகும். பூஞ்சைகளைப் பற்றிய நூலிதழான மைக்கொலோஜியாவில் 2010இல் இது விபரிக்கப்பட்டது. [1]

இந்தக் காளான் தென் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரொபர்ட் கொஃபானால் ஐக்கிய அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் அமைந்துள்ள ரோக் ஆற்றில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. [2] [3] நீரடிக்காளான் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. நீருக்குள் வசிக்கும் முதன்முதல் அறியப்பட்ட காளான் எனும் காரணத்தால் 2011 ஆம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்பு

  1. http://species.asu.edu/2011_species08
  2. நீரடிக்காளான் காணொளி

மேற்கோள்கள்

  1. Frank JL, Coffan RA, Southworth D., JL; Coffan, RA; Southworth, D (2010). "Aquatic gilled mushrooms: Psathyrella fruiting in the Rogue River in southern Oregon". Mycologia 102 (1): 93–107. doi:10.3852/07-190. பப்மெட்:20120233.
  2. "What Lies Beneath: A New Mushroom". Southern Oregon University College of Arts and Sciences (January 1, 2008). பார்த்த நாள் 2008-09-08.
  3. siskiyoudaily.com (January 25, 2008). "US: Scientists discover new mushroom species in the Rogue Valley". FreshPlaza. http://www.freshplaza.com/news_detail.asp?id=15146. பார்த்த நாள்: 2008-09-13.
licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நீரடிக் காளான்: Brief Summary ( tamil )

fornì da wikipedia emerging languages

நீரடிக் காளான் அல்லது ரோக் காளான் (ஆங்கிலம்: Rogue mushroom, Underwater Mushroom ; இலத்தின்: Psathyrella aquatica ) ஒரு பூஞ்சைக் காளான் வகையாகும், இதுவரை அறியப்பட்ட காளான் இனங்களில் நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு இனம் இதுவேயாகும். பூஞ்சைகளைப் பற்றிய நூலிதழான மைக்கொலோஜியாவில் 2010இல் இது விபரிக்கப்பட்டது.

இந்தக் காளான் தென் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரொபர்ட் கொஃபானால் ஐக்கிய அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் அமைந்துள்ள ரோக் ஆற்றில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீரடிக்காளான் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. நீருக்குள் வசிக்கும் முதன்முதல் அறியப்பட்ட காளான் எனும் காரணத்தால் 2011 ஆம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

licensa
cc-by-sa-3.0
drit d'autor
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்