dcsimg

பருத்த மூக்கி ( тамилски )

добавил wikipedia emerging languages
 src=
பருத்த மூக்கி

பருத்தமூக்கி (Broadbill): என்பது பொதுவாக ஆப்பிரிக்காவின் சஹாராவில் காணப்படும் மிகச்சிறிய பறவையினமாகும். இவற்றில் ஒரு சில பறவைகள் இமயமலையின் கிழக்கிலும்,இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது நியோரோபிகல் நிலப்பகுதியை சார்ந்தது. இப்பறவையினங்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழும் சபையோவா என்ற இனத்தை சார்ந்ததாகும். இதனை ஒவ்வொன்றையும் மூன்று வேறுபட்ட குடும்பங்களாக வகைப்படுத்தலாம்.

வகைப்பாடு

இவ்வகை பறவைகள் அடர் வண்ணங்களில் காணப்படும். அகன்ற தலையுடனும் பெரிய கண்களுடனும் கொக்கி போன்ற அகலமான 13 முதல் 28 சென்டி மீட்டர் வரை நீளமான மூக்குடனும் காணப்படும்.இதன் இறகுகள் பிரகாசமாக இருக்கும்.ஈரமான வனப்பகுதிகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்கின்றன.[1] இள வயது பறவைகளும் வயது முதிர்ந்த பறவைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கும். இவற்றில் சிலவகைப் பறவைகளின் வால் குட்டையாகவும் வளைந்தும் நிறம் குறைந்தும் இருக்கும்..[2].

நடத்தை மற்றும் சூழலியல்

இப்பறவைகள் பெரும்பாலும் பூரான், சிலந்தி, அட்டைகள், மரத்தவளை மற்றும் பல்லி ஆகிய பூச்சியினங்களையே உணவாகக்கொள்ளும். பறந்த நிலையிலேயே இரையின் மீது தனது எச்சிலை துப்பி உணவை பிடிக்கும்.இவற்றில் சில பறவையினங்கள் பழங்களை உட்கொள்ளும். ஆனாலும் பெரும்பாலான பறவைகள் பூச்சியினங்களையே உணவாகக் எடுத்துக்கொள்கின்றன. இவை இருபது பறவைகள் கொண்ட கூட்டமாகவே வாழும். இது தனது கூட்டினை மரங்களில் சிக்கியிருக்கும் குப்பைகளைக் கொண்டு உருவாக்கும். அதன் தோற்றம் மேற்பக்கம் கூடை போன்ற அகன்ற நிலையிலும் கீழ்ப்பகுதி வால் போன்றும் நீண்ட நிலையிலும், சிலந்தி வலையைப்[1] போலவும் பூஞ்சைக் காளான் போன்றும் காணப்படும். இக்கூட்டினுள் இரண்டு அல்லது மூன்று முட்டைகளையிடும்.[1]

வகைபிரித்தல் மற்றும் அமைப்புமுறை

பருத்தமூக்கி பறவையினங்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழும் சபையோவா என்ற இனத்தை சார்ந்தாக முதலில் வகைப்படுத்தப்பட்டாலும்[3],நான்கு வகை பறவையினங்களாகவே [4] ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்..

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 McClure, H. Elliott (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 158–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85391-186-0.
  2. del Hoyo, J.; Elliott, A.; Christie, D. (2003). Handbook of the Birds of the World. Volume 8: Broadbills to Tapaculos. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-50-4.
  3. Sapayoa aenigma: a New World representative of 'Old World suboscines'
  4. Sapayoa aenigma: a New World representative of 'Old World suboscines'{{dead link|date=November 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes
лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

பருத்த மூக்கி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages
 src= பருத்த மூக்கி

பருத்தமூக்கி (Broadbill): என்பது பொதுவாக ஆப்பிரிக்காவின் சஹாராவில் காணப்படும் மிகச்சிறிய பறவையினமாகும். இவற்றில் ஒரு சில பறவைகள் இமயமலையின் கிழக்கிலும்,இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது நியோரோபிகல் நிலப்பகுதியை சார்ந்தது. இப்பறவையினங்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழும் சபையோவா என்ற இனத்தை சார்ந்ததாகும். இதனை ஒவ்வொன்றையும் மூன்று வேறுபட்ட குடும்பங்களாக வகைப்படுத்தலாம்.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages