dcsimg

மெக்சிக்கோ எறும்புண்ணி ( тамилски )

добавил wikipedia emerging languages

மெக்சிக்கோ எறும்புண்ணி அல்லது வட தமண்டுவா (தமண்டுவா மெக்சிகானா) என்பது ஒரு எறும்புண்ணி விலங்கு. தென் அமெரிக்காவில் வழங்கும் மொழிகளின் ஒன்றான தூப்பி மொழியில் தமண்டுவா என்றால் எறும்புண்ணி என்று பொருள் [3] இது மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு. கிரேக்க மொழியில் Myrme (மிர்மி) என்றால் எறும்பு, phag ('வா'க்) என்றால் உண்ணுதல். எறும்புண்ணிக் குடும்பத்தை மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்று அழைப்பர். இக்குடும்பம் பிலோசா (Pilosa) என்னும் உயிரின வகுப்பில் உள்ளது. பிலோசா என்னும் சொல் மயிருடைய (pilos= hairy) என்னும் பொருளுடையது. தற்பொழுது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள ஈரப்பதம் மிக்க வெப்பமண்டல அல்லது இடைவெப்ப மண்டலக்காடுகளில் காணப்படுகின்றது. இவ்விலங்கு பெலீசு, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, ஈக்வெடோர், எல் சால்வெடோர், கௌதமாலா, ஹாண்டுராஸ், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பெரு, வெனிசூயெலா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

உசாத்துணை

  1. வார்ப்புரு:MSW3 Gardner
  2. Meritt, D., Samudio, R. & members of the Edentate Specialist Group (2006). Tamandua mexicana. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2007-07-31.
  3. தமண்டுவா (tamandua) என்னும் சொல் தென் அமெரிக்காவில் வழங்கும் தூப்பி மொழியில் இருந்து போர்த்துகீசிய மொழி கடனாகப் பெற்று, பின்னர் அதன் வழியாக ஆங்கிலத்திலும் , அறிவியல் கலைச்சொற்களிலும் இச்சொல் எறும்புண்ணி என்னும் பொருளில் வழங்குகின்றது

[[பகுப்பு::ஊனுண்ணிகள்]]

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

மெக்சிக்கோ எறும்புண்ணி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

மெக்சிக்கோ எறும்புண்ணி அல்லது வட தமண்டுவா (தமண்டுவா மெக்சிகானா) என்பது ஒரு எறும்புண்ணி விலங்கு. தென் அமெரிக்காவில் வழங்கும் மொழிகளின் ஒன்றான தூப்பி மொழியில் தமண்டுவா என்றால் எறும்புண்ணி என்று பொருள் இது மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு. கிரேக்க மொழியில் Myrme (மிர்மி) என்றால் எறும்பு, phag ('வா'க்) என்றால் உண்ணுதல். எறும்புண்ணிக் குடும்பத்தை மிர்மிக்கோஃவாகிடீ (Myrmecophagidae) என்று அழைப்பர். இக்குடும்பம் பிலோசா (Pilosa) என்னும் உயிரின வகுப்பில் உள்ளது. பிலோசா என்னும் சொல் மயிருடைய (pilos= hairy) என்னும் பொருளுடையது. தற்பொழுது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள ஈரப்பதம் மிக்க வெப்பமண்டல அல்லது இடைவெப்ப மண்டலக்காடுகளில் காணப்படுகின்றது. இவ்விலங்கு பெலீசு, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, ஈக்வெடோர், எல் சால்வெடோர், கௌதமாலா, ஹாண்டுராஸ், மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா, பெரு, வெனிசூயெலா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages