dcsimg

நீண்டவால் பக்கி ( тамилски )

добавил wikipedia emerging languages

நீண்டவால் பக்கி(Jerdon's Nightjar) பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும்.இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

பெயர்கள்

தமிழில் :நீண்டவால் பக்கி

ஆங்கிலப்பெயர் :Jerdon's Nightjar

அறிவியல் பெயர் :Caprimulgus atripennis

உடலமைப்பு

28செ.மீ. - மஞ்சள் பழுப்பான உடலில் பல நிறக்கறைகளும் கோடுகளும் கொண்டது. [2]

காணப்படும் பகுதிகள்

பசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே எளிதில் பார்வைக்குப் புலப் படாத படியான சுற்றுச் சூழலோடு இயைந்ததாகப் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்,

 src=
நீண்டவால் பக்கி

உணவு

புழு பூச்சிகள், இரவில் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும். [3]

இனப்பெருக்கம்

மார்ச் முதல் ஜூலை வரை சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் இடும்.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages

நீண்டவால் பக்கி: Brief Summary ( тамилски )

добавил wikipedia emerging languages

நீண்டவால் பக்கி(Jerdon's Nightjar) பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும்.இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

лиценца
cc-by-sa-3.0
авторски права
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
изворно
посети извор
соработничко мреж. место
wikipedia emerging languages